ரம்ஜான் கஞ்சிக்கு எடப்பாடி அரசு தரும் அரிசி எங்களுக்கு தேவையில்லை..! திருப்பி அடிக்கும் பள்ளிவாசல்கள்..! தப்லீக்கி டென்சன்!

வழக்கமாக ரம்ஜான் நோன்பு காலத்தில் வழங்கப்படும் அரிசியை நிராகரிக்க போவதாக திருத்துறைப்பூண்டி பள்ளிவாசல்கள் கூறியிருப்பது அரசுக்கு கடும் நெருக்கடியை கொடுத்துள்ளது.


2001-ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் இயங்கி வரும் அனைத்து பள்ளிவாசல்களுக்கும் இலவசமாக அரிசி வழங்க வேண்டும் என்ற அரசாணையை அப்போதைய முதலமைச்சரான ஜெயலலிதா பிறப்பித்தார். அதன்படி கடந்த ஆண்டு வரை அனைத்து பள்ளிவாசல்களிலும் ரம்ஜான் நோன்பு காலம் தொடங்குவதற்கு முன்பே அரசு சார்பில் அரிசி கொடுத்து அனுப்பப்படுவது வழக்கமாகும்.

சென்ற ஆண்டு கூட அரிசியை விரைந்து வழங்குமாறு இஸ்லாமிய அமைப்பினர் வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நோன்புக்கஞ்சிக்கான அரிசியை வழங்கினார். இந்நிலையில், தமிழ்நாடு தலைமை செயலாளரான சண்முகம் 19-ஆம் தேதிக்குள் அனைத்து பள்ளிவாசல்களுக்கும் நோன்பு கஞ்சிக்கான அரிசி அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்தார்.

தற்போது திருத்துறைப்பூண்டி சேர்ந்த பள்ளிவாசல்கள் அரசு வழங்கும் நோன்பு கஞ்சி அரிசியை ஏற்றுக்கொள்ள போவதில்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளனர். 

இஸ்லாமியர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட சி.ஏ.ஏ, என்.ஆர்.சி, என்பிஆர் ஆகிய சட்டங்களுக்கு எதிராக சட்டசபையில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் கேட்டுக்கொண்டனர். ஆனால் தமிழக அரசு கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அந்த அறிவிப்பினை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றவில்லை. இது தமிழகத்தில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களுக்கும் பெருத்த ஏமாற்றத்தை தந்தது.

இதனால் அரசு சார்பில் வழங்கப்படும் அரிசியை நிராகரிக்கப்போவதாக திருத்துறைப்பூண்டி பள்ளிவாசல்கள் ஒன்றாக முடிவெடுத்துள்ளன. இந்த சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் அரசு வழங்கப்படும் கம்பரிசி 8 பெற்றுக் கொள்ள மாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர் என்று கூறப்படுகிறது.

இந்த தீர்மானமானது அதிகளவில் பரவினால் ஆளுங்கட்சிக்கு நெருக்கடி அளிக்கும் வகையில் அமையும் என்று கூறப்படுகிறது.