இந்தியாவை மிரட்டும் சுனில் நரேன், பொல்லார்டுக்கு அணியில் வாய்ப்பு... ஜெயிக்குமா இந்திய அணி..?

2 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய தொடருக்காக சுனில் நரைன் மற்றும் கீரன் பொல்லார்ட் ஆகியோர் மேற்கிந்திய தீவுகள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளது கிரிக்கெட் ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


இந்திய அணி ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்து மேற்கிந்திய தீவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 3 ஒருநாள் போட்டிகள், 3 டி-20 போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. 

இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று முன் தினம் அறிவிக்கப்பட்டது. டோனி 2 மாதம் ராணுவத்தில் பயிற்சி பெற சென்றுள்ளதால் இந்த தொடரில் இடம் பெறவில்லை. 3 பிரிவுகளுக்கும் விராட் கோலியே தலைமை வகிக்க உள்ளார். மூன்று பிரிவுகளிலும் ரவீந்திர ஜடேஜா இடம்பெற்றுள்ளது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் இன்று மேற்கிந்திய தீவுகள் அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. டி-20 தொடரிலிருந்து கிறிஸ் கெய்ல் தன்னை விடுவித்து கொண்டுள்ளார். மேலும் டி-20 அணியில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் கழித்து சுனில் நரைன் மற்றும் கீரன் பொல்லார்ட் சேர்க்கப்பட்டுள்ளனர். காயம் காரணமாக உலக கோப்பையில் இருந்து விலகிய ஆன்றோர்களும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணியின் ரசிகர்களை இந்த செய்தி மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அணித் தேர்வாளரான ராபர்ட் ஹெய்ன்ஸ் கூறுகையில், "இந்த அணி அனுபவசாலிகள் மற்றும் இளைஞர்களின் கலவையை சரியாக பெற்றுள்ளது. சுனில் நரைன் மற்றும் பொல்லார்டின் அனுபவமானது அணிக்கு மிகவும் உதவிகரமாக அமையும். அவர்கள் உலகத்தரம் வாய்ந்த பல்வேறு டி-20 தொடர்களில் பங்கேற்று சிறப்பாக விளையாடி உள்ளனர். குறிப்பாக ஐ.பி.எல் தொடரில் நீண்ட காலமாக இருவரும் ஆதிக்கம் செலுத்தி வருவதால் இந்திய வீரர்களின் குறை நிறைகளை நன்கு அறிந்தவர்கள். ஆகையால் இவர்களது தேர்வு அனைத்து நிச்சயம் பெரிய புத்துணர்ச்சியை அளிக்கும் என்று நம்புகிறோம்" என்று கூறியுள்ளார்.

இந்த தேர்வானது இந்திய அணியை மையமாக வைத்துக்கொண்டு மாற்றி அமைக்கப்பட்டிருப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் கணிக்கின்றனர்.