ஏழைங்றதால தான் என் புருசன சுட்டுக் கொன்னாங்க! கதறும் பெண் டாக்டர் கொலையாளியின் கர்ப்பிணி மனைவி!

நாங்கள் ஏழைகள் என்பதால் எண் கணவரை காவல்துறையினர் என்கவுண்ட்டரில் சுட்டு கொன்றனர் என்று ஒரு குற்றவாளியின் மனைவி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தெலங்கானா மாநிலத்தில் சில வாரங்களுக்கு முன்னர் 26 வயதான பிரியங்கா ரெட்டி என்ற கால்நடை மருத்துவர், 4 லாரி ஓட்டுநர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம்  செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவமானது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

அடுத்த வாரத்திலேயே 4 குற்றவாளிகளும் எண்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளில் ஒருவரான சின்னகேசவலு என்பவரின் மனைவியான ரேணுகா காவல் துறையினரிடம் ஒரு முறையீட்டை முன்வைத்துள்ளார். 

"எங்கள் இருவருக்கும் திருமணமாகி 1 வருடமே ஆகியுள்ளது. தற்போது நான் மாசமாக உள்ளேன். என் கணவரை சுட்டுக்கொன்ற அதே இடத்திலேயே என்னையும் சுட்டுக்கொலை செய்து விடுங்கள். இதுபோன்ற பிற பாலியல் வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டவர்களை ஏன் சுட்டு கொள்ளவில்லை. அவர்களை மட்டும் சிறையில் அடைத்து உணவு கொடுத்தால் எல்லாம் சரியா. என் கணவர் மீது எந்த ஒரு குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை. அப்படி இருக்க நான் எப்படி அவர் குற்றவாளி என்று நம்பலாம்" என்று அழுது புலம்பியுள்ளார். ஒரு வாரத்திற்கு முன்பு சின்னகேசவலுவின் தாயார், என் மகனை எரித்து கொன்று விடுங்கள் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த பேட்டியானது தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.