பொம்பளைங்கன்னா சும்மா இல்லீங்க..! - சாதித்துக்காட்டிய நாகலாந்து பெண்கள்! வைரல் வீடியோ

பெண்கள் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும்  வகையில் நாகாலாந்து பெண்கள் படை வெளியிட்ட வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


பெண்கள் அனைவரும் ஆண்களுக்கு நிகரானவர்களே என்பதை நாகாலாந்து பெண்கள் படை நிருபித்தள்ளனர். நாகாலாந்து வாய்க்கால் சேற்றில் கார் சிக்கி கொண்டது. ஆண்கள் உதவிக்கு வருவார்கள் என்று பெண்கள் எதிர்பார்க்கவில்லை.

சில பெண்கள் காரின் முன் பகுதிக்கு சென்று காரை உயர்த்தினர். பின் பகுதியில் நின்று கொண்டு பெண்கள் சிலர் காரை இழித்துக்கொண்டனர். இதனால் காரின் ஓட்டுநரால் எளிதாக சேற்றிலிருந்து காரை அப்புறப்படுத்த இயன்றது.

அப்புறப்படுத்திய மகிழ்ச்சியில் நாகாலாந்து படை பெண்கள் தங்களை உற்சாகப்படுத்தி கொண்டனர். இந்த சம்பவத்தின் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். மத்திய அமைச்சர் கிரெண் ரிஜு இந்த வீடியோவை பகிர்ந்து தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவமானது பெண்களின் உறுதித்தன்மையை வெளிப்படுத்தியுள்ளது.