பலரை நம்பி ஏமாந்தேன்! பாகுபலி நடிகைக்கு நேர்ந்த கதி! அதிர்ச்சியில் திரையுலகம்!

சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி தன்னை பலர் ஏமாற்றியுள்ளதாக பாகுபலி நடிகை கூறியிருப்பது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கனடா நாட்டை சேர்ந்தவர் நடிகை நோரா பதேகி. இவர் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளின் திரைப்படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் கௌரவ தோட்டங்களிலும் இல்லை படத்தில் ஒரு குத்துப்பாட்டிலும் நடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இவர் பாகுபலி தோழா ஆகிய திரைப்படங்களில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. பாலிவுட்டில் வருண் தவான் கதாநாயகனாக நடிக்கும் "ஸ்ட்ரீட் டான்சர்" எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தன்னுடைய திரைப்பட பயணத்தை பற்றி பகிர்ந்து கொண்ட சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர் கூறியதாவது: நான் கனடா நாட்டை சேர்ந்தவர். வெளிநாடுகளிலிருந்து வரும் பெண்கள் இந்திய நாட்டில் மிகவும் சிரமப்படுகின்றனர். எங்களுக்கு நிறைய துன்பங்கள் நிகழ்கின்றன. என்னை கனடாவிலிருந்து ஒரு ஏஜெண்ட் இந்தியாவிற்கு அழைத்து வந்தார்.

அவர்களிடம் 20 லட்சம் ரூபாயை பறிகொடுத்தேன். அந்த ஏஜென்சியிலிருந்து வெளிவர நினைத்தேன். ஆனால் அவர்கள் என்னுடைய பணத்தை திருப்பி தரவில்லை. இந்நிலையில் 8 பெண்களுடன் இணைந்து அப்பார்ட்மெண்ட் ஒன்றில் தங்கினேன். ஆனால் அவர்கள் என்னுடைய பாஸ்போர்ட்டை திருடி விட்டனர்.

பின்னர் நடிப்பு வாழ்க்கையை தொடர்வதற்கு நான் ஹிந்தி கற்கத் தொடங்கினேன். நடிப்பு தேர்வுக்கு செல்லும் போதெல்லாம் என்னை பலர் அவமானப்படுத்தி திருப்பி அனுப்பியுள்ளனர். ஒரு காலிங் ஏஜெண்ட் என்னை கேவலப்படுத்தி வெளியேற்றியதை இன்று வரை நான் மறக்கவில்லை என்று கூறினார். இந்தப் பேட்டியின் மூலம் அவர் பட்ட சிரமங்களை படித்த நெட்டிசன்கள் மனமுருகி உள்ளனர்.