நைட் ஷிப்ட் செல்வோருக்கு எச்சரிக்கை. உடல் பாகங்களுக்கு உரிய நேரம் எது தெரியுமா?

சாப்பிடாமல்கூட மனிதனால் சில நாட்கள் இருந்துவிட முடியும், ஆனால் தூங்காமல் சில நாட்கள் இருக்க முடியாது. இரவு ஷிப்ட் பணியாற்றுவதால் உடல் அவயங்களில் பெரும் பாதிப்பு ஏற்படலாம் என்பதுதான் மருத்துவ ஆய்வு.


மனித உடலில் உள்ள உறுப்புகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட  2 மணி நேரங்கள் அதீத சக்தியுடன் செயலாற்றுகிறது. அந்த வகையில் மனித உடலில் உள்ள  உறுப்புகள்  எந்தெந்த நேரத்தில் அதிகமாக இயங்குகிறது என்பதைப் பார்ப்போம்.


நுரையீரல்                 : 3 Am - 5 Am - அதனால்தான் அதிகாலை எழுந்து ஓசோன் நிறைந்த சுத்தமான காற்றை உள்வாங்கவேண்டும் என்று சொல்கிறார்கள்.

பெருங்குடல்             : 5 Am - 7 Am -  காலையில் எழுந்தவுடன் பெருங்குடலில் உள்ள அசுத்தத்தை வெளியேற்றிவிட வேண்டும். அப்போதுதான் பெருங்குடல் ஆற்றலுடன் இயங்கமுடியும்.

இரைப்பை                : 7 Am - 9 Am -  இதுதான் காலை உணவு எடுத்துக்கொள்வதற்கு ஏற்ற நேரம். 

மண்ணீரல்               : 9 Am - 11 Am – உணவில் இருக்கும் சக்திகளை கிரகித்துக்கொள்ளும் நேரம் இது. இப்போது அதிக உடல் உழைப்பு இருக்கக்கூடாது.

இருதயம்                   : 11 Am - 1 Pm -  வயிறு காலியாக இருக்கவேண்டிய நேரம் இது. இப்போது கண்டதையும் தின்று இதயத்தின் பணியை சிக்கலாக்கக்கூடாது.

சிறுகுடல்                   : 1 Pm - 3 Pm – மதிய உணவு எடுத்துக்கொள்ளும் நேரம். வயிறு நிரம்ப சாப்பிடக்கூடாது.

சிறுநீர்பை                 : 3 Pm - 5 Pm – தண்ணீர் குடிக்கவேண்டிய நேரம். சாப்பிடும் நேரத்தில் தண்ணீர் குடிக்ககூடாது.

சிறுநீரகம்                  : 5 Pm - 7 Pm – ஓய்வெடுக்க வேண்டிய நேரம் இது.

இருதய மேலுறை    : 7 Pm - 9 Pm  - இரவு உணவு எடுத்துக்கொள்ள வேண்டிய நேரம்.

மூவெப்ப மண்டலம் : 9 Pm - 11 Pm – இரவு படுக்க வேண்டிய நேரம்

பித்தப்பை                  : 11 Pm - 1 Am – கண்டிப்பாக உடலில் உள்ள அனைத்து அவயங்களும் ஓய்வு எடுக்க வேண்டிய நேரம். அதனால் தொலைக்காட்சி பார்ப்பது போன்றவையும் இருக்கக்கூடாது.

கல்லீரல்                     : 1 Am - 3 Am – ஆழ்ந்து உறங்கவேண்டிய நேரம் இது. எந்தக் காரணம் கொண்டும் விழிக்கவே கூடாது.

இத்தனை அவயங்களும் அவை வேலை செய்ய வேண்டிய நேரத்தில் சரியாக இயங்க வேண்டும் என்றால் இரவில் விழித்திருக்கக் கூடாது.