ஆதரவற்ற முதியவருக்கு அரவணைப்பு! தோழமை சமூக சேவை மையத்துக்குப் பாராட்டு!

கடந்த கஜா புயல் தாக்குதலின் போது, அதே புயல் வேகத்தில் உருப்பெற்றது தான் தோழமை சமூக சேவை மையம். ஊரையே உருகுலைத்த கஜா புயல்.


நாகப்பட்டினம் திருவாரூர் தஞ்சை கடலூர் மாவட்ட மக்களிடம் நீங்கா நினைவுகளை பதித்துவிட்டு சென்றது. அதுமட்டுமின்றி இன்றைய இளைஞர்களின் தனிப்பட்ட பண்புகளையும் தொண்டுள்ளங்களையும் மக்களுக்கு தெரியப்படுத்தியும் சென்றுள்ளது என்றால் அது மிகையாகாது தான்.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தோழமை சமூக சேவை மைய ஒருங்கிணைப்பாளர் திரு. உதயகுமார் அவர்கள் பேராவூரணியை அடுத்த ஒட்டங்காடு நோக்கி சென்றுகொண்டிருக்க. இடையில் கீழக்காடு பேருந்து நிறுத்தத்தில். வயதான நபர் ஒருவர் மயங்கிய நிலையில் இருந்ததை பார்த்து. நான்கு நாட்களாக உணவின்றி பேருந்து நிறுத்தத்தில் மயங்கி கிடந்த அந்த முதியவரை மீட்டு.

காவல்துறை அனுமதியுடன் முதியோர் காப்பகத்தில் சேர்த்துள்ள இவரின் தன்னம்பிக்கையை மற்றும் மகத்தான சமூக சேவையை பட்டுக்கோட்டை பேராவூரணி பகுதியே வெகுவாக பாராட்டி வருகிறது. கஜா பூயலில் தாக்குதலில் உருக்குலைந்த பேராவூரணி பகுதியை. நண்பர்கள் உதவியோடு பகுதிகளை சீரமைத்த பெருமையும் இந்த தோழமை சமூக மையத்தையேச் சாரும்.

ஆம். புயல் தாக்குதலின் போது மக்கள் செய்வதறியாது தவித்துக் கொண்டிருந்த வேளையில். சமூக ஊடகங்கள் வாயிலாக பல்வேறு மக்களை ஒருங்கிணைத்தும் உதவிகள் பெற்றும் பேராவூரணி பகுதி மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ததுடன் புயலுக்குப் பிறகான சேவைகளை முன்னின்று நடத்தியது இந்த தோழமை.  

உள்ளூர் வெளியூர் மற்றும் வெளி நாட்டு நண்பரிகளின் உதவியோடு. கஜா பூயலில் வாழ்வாதாரங்களை இழந்த 20க்கும் மேற்பட்டோருக்கு தங்களால் இயன்ற அளவு வீடு கட்டி கொடுத்தது மட்டுமல்லாமல் ஒருங்கிணைந்த பட்டுக்கோட்டை பேராவூரணி பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்கள் மூலமாக மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வருகிறது இந்த சமூக சேவை மையம்.

ஆதரவற்ற நிலையில் இருந்த முதியவருக்கு பாதுகாப்பளித்து. அரவணைப்போடு அவரை காப்பாற்றியுள்ள இந்த சேவை அமைப்பினைப் போல ஒவ்வொரு மனிதர்களும் திகழ வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறார்‌ இந்த இளைஞர்.

மணியன் கலியமூர்த்தி