வென்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்த கர்ப்பிணி பெண்ணிடம் மருத்துவமனை ஊழியர் தவறாக நடந்துகொண்ட சம்பவமானது ஹைதராபாதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரசவத்திற்காக ஹாஸ்பிடலில் அட்மிட்! உயிருக்கு போராடிய கர்ப்பிணியிடம் சில்மிசம்! வார்ட் பாய் அரங்கேற்றிய தகாத செயல்!
ஹைதராபாத் மாநிலத்தில் பஞ்சாரா ஹில்ஸ் எனும் இடம் அமைந்துள்ளது. இப்பகுதியை சேர்ந்த 30 வயதான பெண்ணொருவர் பிரசவத்திற்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். குழந்தை பிறந்தவுடன் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமானது. மருத்துவர்கள் அவரை வென்டிலேட்டரில் வைத்து கவனித்து வந்தனர்.
அச்யுத் ராவ் என்ற 50 வயது மதிக்கத்தக்க வார்ட் பாய் அந்த மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். வியாழக்கிழமையன்று அவர் வென்டிலேட்டரிலிருந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றுள்ளார். உடல்நிலை சரியில்லாததால் அந்தப் பெண்ணால் உடனடியாக நடவடிக்கை எடுக்க இயலவில்லை.
நேற்று உடல்நிலை சீரானதற்குப்பிறகு அந்தப்பெண் தன் கணவனிடம் தனக்கு நேர்ந்த இன்னல்களை கூறியுள்ளார். உடனடியாக பெண்ணின் கணவர் பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த பஞ்சாரா ஹில்ஸ் காவல்துறையினர் அச்யுத் ராவை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.