ஏஞ்சலினா ஜோலியை போல் மாற முகமாற்று அறுவை சிகிச்சை! அழகிய இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

ஏஞ்சலினா ஜோலி போல் மாற நினைத்து இளம்பெண் கைது செய்யப்பட்டிருப்பது ஈரான் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஈரான் நாட்டில் சஹார் என்ற 22 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவருக்கு பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலியை போல் முகத்தை மாற்றியமைக்க விருப்பமிருந்தது. இதற்காக அவர் கிட்டத்தட்ட ஐம்பது முறைக்கு மேல் அறுவைசிகிச்சை செய்துகொண்டார்.

இதனால் இவருடைய முகம் படு கோரமாக மாறியது.சில ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்து கொண்ட புகைப்படத்தை. இவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டார். கண்ணங்கள் கூர்மையாகவும், எலும்புகள் பெரிதாகவும் வித்தியாசமாக தோற்றமளித்தார். இதனால் இவருடைய புகைப்படங்கள் வைரலாயின.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் அந்த புகைப்படங்கள் ஃபோட்டோஷாப் மற்றும் மேக்கப்பின் மந்திரத்தினால் ஏற்பட்டவை என்று கூறினார். இதனால் அந்நாட்டில் பெரும் சர்ச்சை வெடித்தது. மேலும் அஞ்சலினா ஜோலி போல் மாற தனக்கு எந்த விருப்பமும், அவசியமுமில்லை என்று கூறினார்.

இந்நிலையில் ஈரான் சைபர் கிரைம் காவல்துறையினர் இவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.