குழந்தையை குண்டாக்க ஆசையா? இதோ முக்கியமான குறிப்புகள் ..

சின்ன வயதில் குழந்தைகள் கொழுகொழுவென இருந்தால்தான் பார்க்க அழகாக இருப்பார்கள். தங்கள் பிள்ளை மட்டும் குண்டாக இல்லையே என்று பல பெற்றோர் வருத்தப்படுகிறார்கள். இனிமேல் அப்படிப்பட்ட கவலை எந்த பெற்றோருக்கும் தேவையில்லை.


·         அதிகம் பால் குடித்தால் குண்டாகும் என்று அதிக நேரம் பால் கொடுப்பதால் மட்டும் குழந்தை குண்டாகாது.

·         கொஞ்சம் கொஞ்சமாக அதேநேரம் குழந்தை விரும்பும்வண்ணம் பல தடவைகளில் பால் கொடுக்க வேண்டும்

·         குழந்தை நன்றாக தூங்குகிறது என்று ஐந்து - ஆறு மணி நேர இடைவெளிக்குப் பிறகும் பால் கொடுக்காமல் விடுவது தவறு.

·         தூங்கும் குழந்தையை தொட்டு எழுப்பி பால் கொடுத்து தூங்கவைத்தால்தான், பசியின்றி நிம்மதியாக தூங்கும்.

நல்ல தூக்கமும், போதுமான தாய்ப்பாலும்தான் குழந்தையின் எடையை அதிகரிக்கும் முக்கிய காரணிகளாகும். இதற்குபின்பும் குழந்தை குண்டாகவில்லை என்றால் கவலை வேண்டாம், ஆரோக்கியம்தான் முக்கியமே தவிர உடல் குண்டாக இருப்பது அல்ல