இரவில் ஆண்..! பகலில் பெண்..! பெற்றோரை காப்பாற்ற நிஜ அவ்வை சண்முகியமாகிய மாறிய மதுரை இளைஞன்! நெகிழ வைக்கும் செயல்!

வயதான பெற்றோரை காப்பதற்காக திருமணம் செய்து கொள்ளாமல் 40 வயது நபர் பெண் வேடமிட்டு வேலை பார்த்துவரும் சம்பவமானது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.


மானாமதுரை அருகேயுள்ள மலையநேத்தலை என்னும் பகுதியை சேர்ந்தவர் ராஜா.  இவருடைய வயது 40. இவருடன் வயதான பெற்றோர் உள்ளனர். அவர்களை காப்பாற்றுவதற்காக யாரும் எண்ணிப்பார்க்க முடியாத செயலை ராஜா செய்து வந்துள்ளார்.

தினமும் காலையில் தன் சொந்த ஊரில் இருந்து மதுரைக்கு பேருந்தின் மூலம் வரும் ராஜா, மறைவான பகுதிக்கு சென்று பெண் வேடம் அணிந்து கொள்வார். நீள முடி உடைய விக், சேலை ஆகியவற்றை அணிந்து கொண்டு 3 பேரின் வீட்டிற்கு வீட்டு வேலைகளுக்காக சென்று வந்துள்ளார். 

வீட்டுவேலைகளை முடித்தவுடன் மாறுவேடத்தை கலைத்துவிட்டு மீண்டும் ராஜாவாக சொந்த ஊருக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். இதன் மூலம் வரும் சம்பாதியத்தை வைத்து தன்னுடைய பெற்றோரை காப்பாற்றி வந்துள்ளார். தொடக்கத்தில் வேலை தேடிய போது ஆண்களுக்கு வேலை இல்லை என்று நிராகரிக்கப்பட்டதாலேயே அவர் இந்த நிலைக்கு தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. 

மேலும் ராஜாவுக்கு நெருக்கமானவர்கள் அவரிடம் இத்தகைய செயலை விட்டுவிடுமாறு கூறியுள்ளனர். மாறுவேடம் அணிதல், நம்பிக்கை மோசடி, அடையாளங்களை மறைத்தல் ஆகிய குற்றங்கள் சுமத்தப்படும் என்று ராஜாவுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

இருப்பினும் பெற்றோரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ராஜா, ராஜாத்தியாக மாறியுள்ளது கேட்போரை நெகிழ வைத்துள்ளது. இந்த சம்பவமானது மானாமதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.