இதயத்தை பத்திரமாக பார்த்துக்கொள்ள ஆசையா… இதை மட்டும் கடைபிடிச்சா போதுங்க… !!

டயட் குறைந்த எண்ணெய் மட்டுமே சமையலுக்குப் பயன்படுத்த வேண்டும். ஆலிவ் ஆயில் பயன்படுத்துங்கள். ரேட்டைப் பார்த்து பயந்து கொஞ்சமாக பயன்படுத்துவீர்கள். அதேபோன்று குறைந்த கார்போ ஹைட்ரேட் உள்ள அசைவ பொருட்களும் அதிக புரோட்டின் சத்து நிறைய பயிறு வகைகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.


தினமும் குறைந்தது அரை மணி நேரம் நடகக்வேண்டும்குறைந்த பட்சம் வாரத்தில் 5 நாட்கள் நடைபயிற்சி அவசியம்அக்கம்பக்கத்து இடங்களுக்கு நடந்துசெல்லப் பழகுங்கள். குறிப்பாக கடையில் பால் வாங்க, காய், கனிகள் வாங்க நடந்துசெல்லுங்கள். அதுதான் ஆரோக்கியம்.

ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்வதையும், லிப்ட் பயன்படுத்துவதையும் தவிருங்கள். அமர்ந்துதான் பார்க்கவேண்டிய வேலை என்றால், குறைந்தது ஒரு மணி நேரத்துக்கு ஐந்து நிமிடங்கள் எழுந்து ஒரு குட்டி நடை போடுங்கள்.

மிகமிக முக்கியமான ஒரு அபாய எச்சரிக்கை, புகை பிடிப்பதை அறவே நிறுத்தி விடவேண்டும் என்பதுதான். ஏனென்றால் புகை பிடிப்பதுதான் உயிர்க்கொல்லி ஆகும்.

 உடல் எடையை கட்டுக்குள்  வைத்திருக்கவேண்டியது மிகவும் அவசியம். ஏதேனும் காரணங்களால் ஒரே மாதத்தில் ஒரு கிலோவுக்கு மேல் எடை கூடுவது அல்லது குறைவது ஆபத்து. அதனால் மாதம்தோறும் எடையைக் கண்காணிப்பது மிகவும் அவசியம்.

ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை எனப்படும் நீரிழிவு நோய் இருப்பவர்கள், அதன் அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இப்படி இருந்துகொண்டால் இதயத்தைக் கண்டு அச்சப்பட அவசியம் இல்லை.