பொதுமேடையில் நடிகர் பார்த்திபனிடம் பகிரங்கமாக கெஞ்சிய நடிகர் விஜயின் தந்தை! காரணம் இது தான்!

நடிகர் பார்த்திபனிடம் உதவி இயக்குநராக பணியாற்ற வேண்டும் என்று இளையதளபதி விஜய்யின் தந்தை கூறியிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


இளையதளபதி விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர். இவர் நீண்ட காலமாக சினிமா துறையில் இயக்குநராக பணியாற்றி வருகிறார். இவர் "கேப்மாரி" என்ற திரைப்படத்தை 70-ஆவது படமாக இயக்கி வருகிறார்.

சமீபத்தில் நடிகர் பார்த்திபன் இயக்கி வெளிவந்துள்ள "ஒத்த செருப்பு சைஸ் 7" என்ற திரைப்படம் வெகுவாக கோலிவுட்டில் பேசப்பட்டு வந்துள்ளது. இந்தப்படத்தின் 8-வது நாள் வெற்றி விழா நேற்று நடைபெற்றது. இதில் சந்திரசேகரும் கலந்து கொண்டார். 

அப்போது அவர் பேசுகையில், "நான் பார்த்திபனிடம் உதவி இயக்குனராக சேர்ந்து நிறைய கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன். நான் கமர்ஷியலாக படம் எடுக்கும் இயக்குனர். என்னை அவர் உதவி இயக்குனராக சேர்த்துக் கொண்டால் அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்வேன். இந்தப்படத்திற்கு மட்டும் மத்திய அரசின் விருது கிடைக்காவிடில் மத்திய அரசின் மீது உள்ள நம்பிக்கையே நான் இறந்து விடுவேன்" என்று உறுதியாக கூறினார்.

இதேபோன்று இயக்குநர் சங்க தலைவரான ஆர்.கே.செல்வமணி கூறுகையில், "இந்த படத்திற்கு மத்திய அரசின் சிறந்த படம் என்ற விருது கிடைக்காவிடில் தமிழ் திரையுலகினர் ஒன்று திரண்டு மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்று கூறினார்.

சந்திரசேகர் பேசியதை பார்த்திபன் அவருடைய பாணியிலேயே சமாளித்து கொண்டார். இந்த சம்பவமானது நேற்று பட விழாவில் வியப்பை ஏற்படுத்தியது.