தவறி விழுந்த இடத்தில் சுர்ஜித்துக்கு கோவில்! தாய் கலா மேரி கண்ணீர்! கதறல்! கெஞ்சல்!

சுர்ஜித் இறந்த இடத்தில் கோவில் கட்ட வேண்டும் என்று அவருடைய தாயார் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.


திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை எனுமிடம் அமைந்துள்ளது. இங்கு நடுக்காட்டுப்பட்டி எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஆழ்துளை கிணறு அமைந்துள்ளது.  இந்த கிணற்றுக்கு அருகே விளையாடி கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் தவறி விழுந்தது. சுர்ஜித்தின் தந்தையின் பெயர் ஆரோக்கியசாமி. தாயாரின் பெயர் கலா மேரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

பின்னர் தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 30 அடி ஆழத்தில் விழுந்த குழந்தை, தற்போது 100 அடி ஆழத்தை எட்டியுள்ளது. தொடர்ந்து 90 மணி நேரமாக மீட்புப்பணிகள் நடைபெற்று வந்தன. இன்று காலை சிதைந்த நிலையில் சுர்ஜித்தின் உடலை காவல்துறையினர் மீட்டனர். இறந்துபோன சுர்ஜித்க்கு உடனடியாக பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு இறுதி சடங்குகள் மேற்கொள்ளப்பட்டன.

மீட்பு பணியின் பெரும்பான்மை நேரத்தை மயக்கத்திலேயே கலா மேரி சில மணிநேரங்களுக்கு முன்பு சுயநினைவை எட்டியதாக தெரியவருகிறது. அவர் கண்ணீர் மல்க அளித்த பேட்டியானது அனைத்து தாய்மார்களையும் மனமுருக வைத்துள்ளது.

அதாவது, "ஆழ்துளை கிணற்றினால் என் மகனின் இறப்பே கடைசியாக இருக்க வேண்டும். இனி வேறு யாரும் ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்து போகக்கூடாது. சுர்ஜித் விழுந்து இறந்த இடத்தில் கோவில் கட்டி பார்க்க ஆசைப்படுகிறேன். தங்களால் இயன்ற முயற்சிகளை எடுத்ததாக முதல்வர் கூறினார். என் மகன் மீண்டு வருவதற்காக பிரார்த்தனை செய்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்" என்று கூறினார்.

இந்த பேட்டியானது தமிழகத்தில் உள்ள அனைத்து தாய்மார்களையும் மனம் உருக வைத்தது.