பிரிந்து சென்ற கணவன் மூலம் குழந்தை கேட்கும் மனைவி! நீதிமன்றத்தில் நூதன வழக்கு!

மும்பை மாநகரில் கணவனை பிரிந்து வாழும் மனைவி அதே கணவன் மூலமாக குழந்தை பெற வேண்டும் என்று குடும்ப நல நீதிமன்றத்தை நாடியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


2017-ஆம் ஆண்டு மும்பையில் கணவன் ஒருவர் தன் மனைவியின் கொடுமைகளை தாங்காமல் விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை பதிவு செய்தார். அதற்கு  பதிலளிக்கும் வகையில் மனைவி தனக்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கூறினார்.

இவர்களுக்கு சட்டத்தின்படி இன்னும் விவாகரத்து நடக்காத நிலையில் மனைவி ஒரு வினோதமான கோரிக்கையை நீதிமன்றத்தில் முன் வைத்துள்ளார்.அதாவது பிரிந்த கணவனின் மூலம் தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்று முறையிட்டுள்ளார். நேரடியாகவோ அல்லது செயற்கை மருத்துவம் மூலமாகவோ குழந்தை வேண்டும் என்று ஆணித்தரமாக நீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இதைப்பற்றி நீதிபதிகள் கணவரிடம் கேட்டதற்கு, தனக்கு சிறிதும் எந்த முறையிலும் உடன்பாடில்லை என்று நிராகரித்து விட்டார்.

இது போன்ற அரிதான வழக்குகளில், பெண் தன் வாரிசை வளர்த்துக்கொள்வதற்கு சாதகமாக தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் ஆனால் விருப்பமின்றி யாரையும் வற்புறுத்த இயலாது என்றும் நீதிபதிகள் கூறினர். இறுதியாக பெண்ணிற்கு இழப்பீடு வழங்கும் வகையில், அவரையும் செயற்கை மருத்துவத்தைப் பற்றி தெரிந்து கொள்ள நல்ல மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுரை கூறியுள்ளனர்.

இந்த வழக்கில் மனைவி முன்வைத்துள்ள கோரிக்கையானது பல்வேறு விதங்களில் அரிதாக உள்ளது என்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.