அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த கணவன்-மனைவி மற்றும் 2 குழந்தைகள்! வீட்டுக்குள் இருந்து வந்த அலறல்! பதைபதைக்க வைக்கும் சம்பவம்!

உறங்கி கொண்டிருந்தபோது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் உயிரிழந்த துயரமானது மத்தியப்பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.


மத்திய பிரதேச மாநிலத்தில் மோகன் என்பவர் வசித்து வந்தார். இவருடைய மனைவியின் பெயர் ஷர்மிளா. இத்தம்பதியினர் 4 மாதங்களுக்கு முன்னர் வாடகை வீட்டிற்கு குடிபெயர்ந்தனர். இத்தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 

2 நாட்களுக்கு முன்னர் இவர்களுடைய வீட்டில் ஒரே அறையில் மோகன், ஷர்மிலா மற்றும் அவர்களுடைய 2 குழந்தைகள் உறங்கி கொண்டிருந்தனர். அப்போது அதிகாலை 4 மணியளவில், வீட்டின் மேற்கூரை எதிர்பாராவிதமாக இடிந்து 4 பேரின் மேலும் விழுந்துள்ளது.

4 பேரும் கடுமையான வலியால் அலறியுள்ளனர். அலறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைவாக வந்து 4 பேரையும் மீட்டெடுத்து அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே மோகனை தவிர மற்ற மூவரும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

மருத்துவமனையில் மோகனை பரிசோதித்த போது அவரும் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். உடனடியாக காவல்துறையினர் மருத்துவமனைக்கு சென்று அனைவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அக்கம்பக்கத்தில் விசாரணை நடத்தினர்.

விசாரணையின்போது மோகன் இருந்த வீடு 45 ஆண்டுகாலமாக இருப்பதாகவும். இடிந்து விழ தொடங்கிய மேற்கூரையை வீட்டு உரிமையாளர் சரிசெய்ய தொடங்கிய பின்னரே இந்த நிகழ்வு ஏற்பட்டதாகவும் கண்டறிந்துள்ளனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.