என் சாமி என்னை விட்டு போய்டுச்சே..! கதறி அழுத உறவுகள்..! சில நிமிட அலட்சியத்தால் 3 வயது ருத்திரபிரியா கடவுளிடம் சென்ற பரிதாபம்!

வீட்டின் சுற்றுசுவர் சரிந்து விழுந்ததில் 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவமானது ஈரோடு மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஈரோடு மாவட்டத்தில் கிருஷ்ணம்பாளையம் என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு பாதாள சாக்கடை சீர் செய்வதற்காக சுற்றுவட்டார பகுதிகளில் பள்ளங்கள் தோண்டப்பட்டு வருகின்றன. அப்பகுதியில் வசித்து வரும் பிரேம்குமார் என்பவரின் வீட்டு வாசலிலும் பொர்க்ளேன் எந்திரம் மூலம் பள்ளங்கள் தோண்டப்பட்டு வந்தன. 

இதனால் அவருடைய வீட்டின் சுற்றுசுவர் வலுவிழந்தது. இதனை பார்க்காமல் மாநகராட்சி அதிகாரிகள் அன்றைய நாளின் வேலையை முடித்துவிட்டு சென்றுவிட்டனர். பிரேம்குமாருக்கு, ஜீவன்குமார் மற்றும் ருத்ரப்பிரியா என 2 குழந்தைகள் உள்ளனர். இருவருமே ஆபத்தை உணராமல் சுற்றுச்சுவருக்கு அருகே சென்று விளையாடிக்கொண்டிருந்தனர்.

வலுவிழந்த சுற்றுசுவர் அப்படியே உள்பக்கமாக சரிந்து விழுந்தது. விளையாடிக்கொண்டிருந்த ஜீவன்குமார் மற்றும் ருத்ரப்பிரியா மீது சுவர் விழுந்துள்ளது. குழந்தைகளின் அலறல் சத்தத்தை கேட்ட உறவினர்கள், உடனடியாக மீட்டு எடுத்து அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் படுகாயமடைந்த ருத்ரப்பிரியா இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

மேலும் ஜீவன்குமார் தீவிர சிகிச்சைப்பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. மருத்துவமனைக்கு விரைந்து வந்த குழந்தைகளின் தாத்தா மற்றும் பாட்டி, குழந்தைகளுக்கு நேர் அந்த துக்கத்தை பார்த்து கதறி அழுத சம்பவமானது காண்போரை மனம் உருக வைத்தது. மருத்துவமனைக்கு விரைந்து வந்த காவல்துறையினர் ருத்ரப்பிரியாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர். பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சி அதிகாரிகள் சுற்றுச்சூழல் குறித்து பிரேம்குமாரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது என்று அக்கம்பக்கத்தினர் கூறுகின்றனர்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.