டிசம்பர் மாதம் முதல் டேட்டா மற்றும் பேசுவதற்கான கால் கட்டணத்தை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை என்று வோடாஃபோன் ஐடியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் மாதம் முதல் டேட்டா மற்றும் கால் கட்டணம் உயரும்..! வாடிக்கையாளர்களுக்கு வோடாஃபோன் கொடுத்த ஷாக்!

கடந்த மூன்று மாதங்களில் மட்டும் வோடாஃபோன் நிறுவனம் சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்தது. மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய சுமார் 36 ஆயிரம் கோடி ரூபாயும் வோடாஃபோன் நிறுவனம் பாக்கி வைத்துள்ளது. இதனால் அந்நிறுவனம் திவாலாகும் நிலையில் உள்ளது.
இந்த நிலையில் வோடாஃபோன் நிறுவனம் இன்று தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் செல்போன் சேவை வழங்க அதிக செலவு ஆவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தொலைத் தொடர்புத்துறையின் பின்னடைவு காரணமாக ஏற்பட்ட இழப்பை வோடாஃபோன் நிறுவனம் சரி செய்ய வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக டிசம்பர் மாதம் முதல் கட்டணத்தை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை என்று வோடாஃபோன் கூறியுள்ளது. இதனால் டிசம்பர் 1 முதல் டேட்டா மற்றும் தொலைபேசி பேசுவதற்கான கால் கட்டணத்தை உயர்த்த உள்ளதாக வோடாஃபோன் கூறியுள்ளது.