என் வாழ்க்கையில் முதல் முறையாக அந்த சம்பவம் நிகழ்ந்த நாள்! விஜே மணிமேகலை வெளியிட்ட வீடியோ!

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் விஜேவாக பணியாற்றி வருபவர் மணிமேகலை.


தன்னுடைய கலகலப்பான பேச்சு மூலம் ரசிகர்களை தன் வசப்படுத்தியவர் மணிமேகலை. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மணிமேகலை நடன இயக்குனரான காதர் ஹுசைன் என்பவரை தீவிரமாக காதல் செய்து வந்தார்.

இதனையடுத்து இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி தனது நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்திற்கு இருவீட்டாரும் இடமும் மிகப்பெரிய எதிர்ப்பு உருவானது.

திருமணத்திற்கு பின்பு மிகப்பெரிய கஷ்டங்களையும் சவால்களையும் சந்தித்து வந்த இந்த ஜோடி ஆனது சமீபத்தில் பிரபல தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றதன்மூலம் மிகவும் பிரபலமான ஜோடியாக வலம் வந்தனர்.

இதற்கிடையில் மணிமேகலை மற்றும் ஹுசைன் தம்பதியினர் தங்களுடைய இரண்டாம் ஆண்டு திருமண விழாவை நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடினர்.

அவர்களது திருமண நாளை முன்னிட்டு மணிமேகலை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் புதிய பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்தப் பதிவில், " சம்பவம் நடந்த நாள் இன்று .." என்று குறிப்பிட்டு பதிவு வெளியிட்டிருந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாக பரவியது.

இந்த ஜென்மத்தோட சிறந்த நாள் இன்று. கடந்த 2 ஆண்டுகளில் நிறைய கஷ்டங்களை சந்தித்த போதிலும் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறோம்.

எல்லா கஷ்டங்களையும் சிரிப்புடனே எதிர்கொள்ளும் தைரியத்தை நீ எனக்கு அளித்திருக்கிறாய். நாம முடிவு பண்ண மாதிரி சில்வர் கலர் ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்குற வரைக்கும் ஓயக்கூடாது.. அடுத்த ஆண்டு ஆனந்தமான வாழ்க்கையை எதிர்கொள்ள ஆர்வமாக இருக்கிறேன் உற்சாகமாக அந்த பதிவில் மணிமேகலை கூறியிருக்கிறார்.

இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் திருமண நாள் வாழ்த்துக்களை கூறிய வண்ணம் உள்ளனர். Photo Crdit: Galatta.com