ரிலீசுக்கு முன்பே சர்கார் சாதனையை முறியடிக்கும் விஸ்வாசம்! தெறிக்க விடப் போகும் தல ரசிகர்கள்!

நடிகர் விஜயின் சர்கார் திரைப்படம் வெளியான போது படைத்த சாதனையை விஸ்வாசம் படம் வெளியாகும் போது முறியடிக்கப்பட உள்ளது.


நடிகர் விஜயின் சர்கார் திரைப்படம் வெளியான போது படைத்த சாதனையை விஸ்வாசம் படம் வெளியாகும் போது முறியடிக்கப்பட உள்ளது.

   நடிகர் விஜய்க்கு தமிழகத்தில் எப்படி ரசிகர் பட்டாளம் ஜாஸ்தியோ, அதே போல் மலையாளத்திலும் ஏராளமான ரசிகர்கள் உண்டு. சர்கார் படத்தை வரவேற்கும் விதமாக கேரளாவின் கொல்லத்தில் நடிகர் விஜய்க்கு பிரமாண்ட கட் அவுட் ஒன்றை அங்குள்ள ரசிகர்கள் வைத்திருந்தனர். இந்திய அளவில் அனைத்து தரப்பினரையும் திரும்பி பார்க்க வைக்கும் வகையில் 175 அடி உயரத்தில் அந்த கட்வு அவுட் பிரமாண்டமாக இருந்தது.

   கேரளாவில் மட்டும் அல்லாமல் தமிழகத்திலும் கூட விஜயின் பிரமாண்ட கட் அவுட் டிரென்ட் ஆனது. ஏனென்றால் ரஜினி ரசிகர்கள் கூட இதுவரை அவருக்கு இவ்வளவு பிரமாண்டமான கட் அவுட் வைத்தது இல்லை. ஆனால் நடிகர் விஜய்க்கு அதுவும் கேரளாவில் அவரது ரசிகர்கள் 175 அடி உயரத்தில் வைத்த கட் அவுட் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் விஸ்வாசம் படம் வெளியாக உள்ள நிலையில் அஜித் ரசிகர்கள் மாஸ் காட்ட திட்டமிட்டுள்ளனர்.

   விஜய் ரசிகர்கள் காட்டிய மாசை விட பிரமாண்ட மாஸ் காட்ட முடிவெடுத்துள்ளனர் அஜித் ரசிகர்கள். விஜய்ரசிகர்கள் கேரளாவில் காட்டிய மாசை அஜித் ரசிகர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் அதிலும் திருச்செந்தூரில் காட்ட உள்ளனர். அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்றால் சுமார் 200 அடி உயரத்திற்கு அஜித்திற்கு கட் அவுட் வைக்க உள்ளனர். அதாவது விஜய்க்கு 175 அடி உயர கட் அவுட் என்றால் அதனை விட 25 அடி உயரமாக 200 அடியில் அஜித்திற்கு கட் அவுட் வைக்க உள்ளனர்.

   விஜய்க்கு 175 அடி உயரத்தில் வைக்கப்பட்ட கட் அவுட் பலத்த காற்று அடித்த போது உடைந்து விழுந்தது. எனவே அஜித்திற்கு வைக்கும் கட் அவுட்டிற்கும் அப்படி ஒரு நிலைமை வந்துவிடக்கூடாது என்று தற்போது முதலே பார்த்து பார்த்து ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக கட் அவுட்டை நிறுத்துவதற்கான சவுக்கு மரங்கள் கொண்டு வரப்பட்டு நிலை நிறுத்தப்பட்டு வருகின்றன.

   விஸ்வாசம் படம் வெளியாவதற்கு முதல் நாள் 200 அடி பிரமாண்ட கட் அவுட் தயாராகிவிடும் என்கிறார்கள் தல ரசிகர்கள். ஆனால் 200 அடி கட் அவுட் வைக்க திருச்செந்தூர் பேரூராட்சி நிர்வாகம் எப்படி அனுமதி கொடுத்தது என்று ஒரு தரப்பினர் தற்போதே கொளுத்தி போட்டுள்ளனர்.