விஸ்வாசம் படத்தின் வசூலை உயர்த்திக் கூற ஆன்லைன் டிராக்கர்ஸ் என்று கூறப்படுபவர்கள் தலைக்கு ஒரு நாளைக்கு ரூபாய் 20 ஆயிரம் என்கிற ரீதியில் பேமென்ட் செட்டில் செய்யப்பட்டு வருகிறது.
பேட்டைக்கு எதிராக சதி! ஆன்லைன் டிராக்கர்ஸ் தலைக்கு ரூ.20 ஆயிரம்! விஸ்வாசம் வசூல் உயர்ந்ததன் பின்னணி!

நடிகர் அஜித் தன்னை
ஒரு ஜெனியூனான மனிதராக காட்டிக் கொள்வதில் வல்லவர். எந்த சர்ச்சையிலும் சிக்கிக் கொள்ளாத
வகையில் காய் நகர்த்துவதில் கெட்டிக்காரர் அஜித். சினிமா நிகழ்ச்சி, விருது நிகழ்ச்சி
என எதிலும் கலந்து கொள்ளாமல் தான் ஒரு தனித்துவமான மனிதர் என்கிற ரீதியில் ஊடகங்களில்
செய்தி வருவது போல் அஜித் பார்த்துக் கொள்வார்.
ஆனால் அவ்வப்போது
படப்பிடிப்பு தளத்தில் அனைவருக்கும் அஜித் பிரியானி செய்து கொடுத்தார், படக்குழுவினர்
அனைவருக்கும் தங்கத்தில் செயின் அணிவித்தார், அப்புக்குட்டியை வைத்து போட்டோ சூட் எடுத்தார்
என்கிற தகவல்கள் மட்டும் கசிந்து ஊடகங்களில் வைரலாகும். இதன் பின்னணியில் யார் இருக்கிறார்
என்றால் அவர் தான் சுரேஷ் சந்திரா.
சுரேஷ் சந்திரா நடிகர்
அஜித்தின் பி.ஆர்.ஓ. எப்போதும் அஜித்துடன் நிழல் போல் இருப்பவர். பெரும்பாலும் வேறு
எந்த நடிகருடனும் இவர் தொடர்பில் இருக்க மாட்டார். அஜித்தும் அப்படி வேறு யாருடனும்
தொடர்பில் இல்லாத நபர்களை தான் தன்னுடன் வைத்துக் கொள்வார். நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி
கேள்விப்பட்டிருப்பீர்கள்.
அஜித் படம் அனைத்தையும்
அவர் தான் தயாரித்து வெளியிடுவார். ஆனால் ஒரு கட்டத்தில் நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்திக்கு
படம் நடிப்பதை அஜித் நிறுத்திக் கொண்டார். ஏனென்றால் அஜித்தை வைத்து வரிசையாக தோல்விப்படம்
எடுத்து துவண்டு போன சக்ரவர்த்தி வேறு சில ஹீரோக்களை வைத்து படம் எடுக்க முடிவு செய்தார்.
இதனால் அவரை அஜித் அப்போதே கழட்டிவிட்டுவிட்டார்.
இதனால் தான் சுரேஷ்
சந்திரா தற்போது வரை அஜித்திற்கு விஸ்வாசமாக இருந்து வருகிறார். திரையுலகில் டெக்னாலஜியை
பயன்படுத்தி எதிரிகளை வீழ்த்தும் கலையை முதலில் அறிமுகப்படுத்தியவர் சுரேஷ் சந்திரா
தான். இவரது பாணி தனியானது. அதாவது இவர் யாருக்கு வேலை பார்க்கிறாரோ அவரை பெரிய அளவில்
தூக்கிபிடிக்கமாட்டார். ஆனால் தான் வேலை பார்க்கும் நபருக்கு யார் போட்டியாளரோ அவரை
தாழ்த்தும் வகையில் வியூகம் வகுப்பார்.
அந்த வகையில் செல்போன்கள்
அறிமுகமாகி எஸ்.எம்.எஸ்கள் பிரபலமாக இருந்த காலகட்டத்தில் விஜயின் ஆதி திரைப்படம் வெளியானது.
அந்த படம் வெளியான முதல் காட்சியிலேயே படத்தை பற்றி எதிர்மறையான கருத்துகள் எஸ்.எம்.எஸ்
மூலம் பரவியது. இதனால் ஆதி படம் 2வது நாளே தியேட்டர்களை விட்டு வெளியேற வேண்டிய நிலை
ஏற்பட்டது.
இதன் பின்னர் வரிசையாக
விஜய் படம் வெளியாகும் சமயங்களில் எல்லாம் அந்தந்த காலகட்டத்தில் பிரபலமாக இருக்கும்
ஊடகம் மூலம் எதிர்மறை கருத்துகளை வெளியிடுவதை சுரேஷ் சந்திரா வாடிக்கையாக கொண்டிருந்தார்.
இதற்காக சென்னை வடபழனியில் தனியாக ஒரு ஆபிசே அவர் நடத்தி வந்ததாகவும் சொல்லப்பட்டது.
பின்னர் பிரச்சனையானதும் தற்போது அந்த வேலையில் சுரேஷ் சந்திரா ஈடுபடுபதில்லை.
ஆனால் தற்போது பேட்ட
படமும் விஸ்வாசம் படமும் ஒரே நாளில் வெளியானது. இந்த சமயத்தில் சுரேஷ் சந்திரா சமூக
வலைதளங்களில் தன்னுடன் நெருக்கமாக இருக்கும் டிராக்கர்ஸ்களை வைத்து விஸ்வாசம் படத்தின்
வசூல் குறித்து கற்பனைக்கு எட்ட முடியாத கட்டுக்கதைகளை பரப்பி வருகிறார். அதாவது தமிழகத்தில்
விஸ்வாசம் படம் வெளியான திரையரங்ககுள் சுமார் 400 மட்டும் தான்.
அவற்றிலும் 90 சதவீத
திரையரங்குகள் காலை நான்கு மணி காட்சி போடவில்லை. ஆனாலும் முதல் நாளில் பேட்ட படத்தை
வசூலில் விஸ்வாசம் தமிழகத்தில் முந்திவிட்டதாக சுரேஷ் சந்திரா தரப்பு கூறிய செய்தியை
தவறாமல் ஆன்லைன் டிராக்கர்ஸ் வெளியிட்டனர். தற்போதும் கூட விஸ்வாசம் 100 கோடி ரூபாய்
வசூலை கடந்துவிட்டது என்று தெரிவித்து வருகின்றனர்.
ஏன் இப்படி இல்லாத
ஒன்றை சொல்கிறார்கள் என்று விசாரித்த போது தான் டிராக்கர்ஸ்க்கு தலைக்கு ரூபாய் 20
ஆயிரம் என்று விலை பேசி தினமும் பைசல் பண்ணப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஒரு ட்வீட்டுக்கு
20 ஆயிரம் ரூபாய் என்றால் படக்குழு கூறும் தகவலை வெளியிட யாருக்கும் கசக்கவா போகிறது?
விஸ்வாசம் பேட்ட படத்தின் வசூலை இப்படித்தான் முந்தியுள்ளது.