அஜித்தின் விஸ்வாசம் பட பிஜிஎம் இசையை காப்பி அடித்த பிரபல நடிகரின் படம்! அதிர்ச்சியில் டி இமான்!

அஜித் நடித்த விசுவாசம் திரைப்படத்தின் இசையைரைப்படம் ஒன்றில் காப்பியடித்து உள்ளதாக புகார் எழுந்துள்ளது.


விசுவாசம் திரைப்படத்தில் தல அஜித், நயன்தாரா போன்ற முன்னணி நடிகர்கள் நடித்து இருந்தனர் . இந்த திரைப்படத்தின் இசையை இமான் இயக்கினார். இந்த திரைப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட்டாக இந்த ஆண்டு அஜித்துக்கு அமைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தில் மிகவும் பேசப்பட்டது இசைதான். ஏனெனில் விசுவாசம் திரைப்படத்தில் இசையை இசையமைப்பாளர் இமான் மிகவும் அழகாக அமைத்திருந்தார். 

இந்நிலையில் விசுவாசம் திரைப்படத்தின் பின்னணி இசை வேறு ஒரு இந்தி திரைப்படத்தில் கா பிடிக்கப்பட்டுள்ளது என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது மார்ஜவான் என்ற ஹிந்தி திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியானது. இந்த டிரைலரில் விசுவாசம் திரைப்படத்தின் பிஜிஎம் ஒலிக்கப்பட்டது கேட்டு அஜீத்தின் ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனைப் பற்றி அறிந்து இசையமைப்பாளர் இமான் சமூகவலைதளத்தில் விசுவாசம் திரைப்படத்தில் இசையை மார்ஜவான் திரைப்படத்தின் ட்ரெய்லரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான எந்தவித அனுமதியும் மார்ஜவான் படக்குழுவினர் பெறவில்லை. இந்த பிரச்சனையை சட்டப்படி கையாள்வதற்கு நாங்கள் தயார் என்று இமான் அந்த பதிவில் வெளியிட்டிருந்தார்.