விஸ்வாசம் வெற்றியா? தோல்வியா? அஜித்தை அவமானப்படுத்திய விநியோகஸ்தர்!

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித்குமார் நடித்து அண்மையில் வெளியான விஸ்வாசம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி என்று திரும்ப திரும்ப கூறி வருகிறார் விநியோகஸ்தர்.


சிறுத்தை சிவாவும் நடிகர் அஜித் குமாரும் தொடர்ந்து நான்காவது முறையாக இணைந்து திரைப்படம் விஸ்வாசம். அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து இருந்தார்.

 

தம்பி ராமையா, விவேக், ரோபோ சங்கர் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்திருந்தனர். ஆக்ஷன், குடும்ப சென்டிமென்ட், தந்தை மகள் பாசம், நகைச்சுவை, சிறந்த பாடல்கள் என வர்த்தகரீதியாக படம் வெற்றி பெறுவதற்கு தேவையான அனைத்து கூறுகளும் இப்படத்தில் அமைந்திருந்தன.

 

பொங்கலையொட்டி வெளியான விஸ்வாசம் திரைப்படம் a,b,c என அனைத்து செண்டர்களிலும் ஓடிக் கொண்டிருப்பதாக கூறுகிறார்கள். முந்தைய அஜித் படங்களின் சாதனைகள் அனைத்தையும் இது முறியடித்து கொண்டிருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.

 

தமிழில் வெளியாகி அதிக வசூலை குவித்த படங்களின் வரிசையில் மெர்சலை பின்னுக்கு தள்ளி விஸ்வாசம் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது என்றும் கூறுகிறார்கள்.

 

இந்த நிலையில் தற்போது இத்திரைப்படமானது உலகம் முழுவதும் 180 கோடி ரூபாய் வசூலை ஈட்டி சாதனை படைத்துள்ளது என்று விநியோகஸ்தர் கூறியுள்ளார். விஸ்வாசம் படம் பெற்ற வெற்றியால் திரையரங்க உரிமையாளர்கள் விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனம் மகிழ்ச்சி அடைந்து உள்ளது.

 

இந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள விநியோகஸ்த நிறுவனமான கே ஜி ஆர் ஸ்டூடியோஸ் விஸ்வாசம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று விட்டதாகவும் இதற்காக ரசிகர்கள் கொண்டாட வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளது

 

ஆனால் விஸ்வாசம் விநியோகஸ்தர் கூறும் அளவிற்கு எல்லாம் வெற்றி இல்லை, மிகைப்படுத்தி கூறுகிறார் என்று திரையுலகை சேர்ந்த சிலர் கிசுகிசுக்கிறார்கள். இதனால் கடுப்பான விநியோகஸ்தர் கே.ஜி.ஆர் ஸ்டூடியோசின் கோட்டபாடி ராஜேஸ் அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 

விஸ்வாசம் படம் மிகப்பெரிய வெற்றி. இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பவர்கள் என்னுடைய அலுவலகத்திற்கு வந்து கணக்கு வழக்குகளை பார்த்துக் கொள்ளலாம் என்று ராஜேஸ் தெரிவித்துள்ளார். இது பலரையும் சிரிக்க வைத்துள்ளது.

 

ஒரு படத்தின் வெற்றி என்பது மக்களால் உணரப்பட வேண்டும், மாறாக கணக்கு வழக்குகளை காட்டுவதாக கூறி விநியோகஸ்தர் விஸ்வாசம் வெற்றியை மட்டும் அல்லாமல் அஜித்தையும் அசிங்கப்படுத்தியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.