அவர் ஒரு மாதிரி! பழைய கணவனின் புதுக்காதலி வீட்டுக்கு மனைவி எழுதிய அந்தரங்க கடிதம்! நடிகர் வாழ்வில் புயல்!

நடிகர் விஷ்ணு விஷாலின் முன்னாள் மனைவி ரஜினி நடராஜன், தனது முன்னாள் கணவர் காதலித்து வரும் இந்நாள் காதலிக்கு அந்தரங்க கடிதம் எழுதியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.


இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தின் மூலமாக நடிகர் விஷ்ணு விஷால் திரை உலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானார். இதனையடுத்து முண்டாசு பட்டினம், சிலுக்குவார் பட்டி சிங்கம், ராட்சசன், இன்று நேற்று நாளை என பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டார். அதிலும் அவர் நடித்த ராட்சசன் திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது.

நடிகர் விஷ்ணு விஷால் கடந்த 2011ஆம் ஆண்டு தன்னுடன் படித்த ரஜினி நடராஜன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் . இவர்கள் இருவருக்கும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒருவரை ஒருவர் சட்டப்படி விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். 

தற்போது மனைவியை விட்டு பிரிந்து வாழும் நடிகர் விஷ்ணு விஷால் 36 வயதாகும் பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை காதலித்து வருவதாகும், தற்போது நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என ஜுவாலா கட்டா சமீபத்தில் பங்கேற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறியிருந்தார். இதனையடுத்து நெட்டிசன்கள் பலரும் புது காதலிக்காக தான் முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டீர்களா என விஷ்ணு விஷாலை கேள்வி எழுப்பி வந்தனர். இவர்கள் இருவரது விவகாரம் சமூகவலைதளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது.  கூடிய விரைவில் திருமண தேதியை முடிவு செய்தபின்பு அதிகாரப்பூர்வமாக ரசிகர்களுக்கு அறிவிக்க இருக்கிறோம் என ஜுவாலா கட்டா கூறியிருந்தார்.

இந்த நிலையில் விஷ்ணு விஷாலின் முன்னாள் மனைவி ரஜினி நடராஜன், ஜுவாலா கட்டா வின் வீட்டிற்கு விஷ்ணு விஷால்-ஐ பற்றி அந்தரங்க கருத்துக்கள் கொண்ட கடிதம் ஒன்று எழுதி அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. விஷ்ணு விஷாலின் முன்னாள் மனைவி எழுதிய கடிதத்தால், ஜுவாலா கட்டாவின் வீட்டில் விஷ்ணு விஷால் உடன் நடைபெறவிருக்கும் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு நிலவி வருவதாக கூறப்படுகிறது. இந்த செய்தியானது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.