நியுஸ் ஜே சேனல் விவகாரம்! வம்பிழுக்கும் விஷால்.. திருப்பி அடிப்பாரா எடப்பாடி?

ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அ.தி.முக. இரும்புக்கோட்டையாக இருந்தது. அவர் போனபிறகு, ஆளாளுக்கு இதனை அசைத்துப் பார்க்கிறார்கள். விஜய் சீண்டிய விவகாரம் இப்போதுதான் முடிவுக்கு வந்திருக்கிறது. அதற்குள் விஷால் வாண்டடாக வந்து வண்டியில் ஏறியிருக்கிறார்.


நடிகர் சங்கத்தைக் கைப்பற்றி, தயாரிப்பாளர் சங்கத்தை கைப்பற்றி மூன்றாவதாக ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியிலும் நிற்பதற்கு ஆசைப்பட்டார் விஷால். தினகரன் பஞ்சாயத்தை முடிக்கமுடியாமல் திணறிக்கொண்டிருந்த எடப்பாடி குரூப்புக்கு, விஷால் தேவையில்லாமல் இடைஞ்சல் கொடுப்பது டென்ஷனைக் கொடுத்தது. விஷாலைப் போன்றே ஜெ.தீபாவும் அங்கு போட்டியிடப் போவதாக பீதியைக் கிளப்பினார். இந்த சில்லறை சமாச்சாரங்களை எல்லாம் வெட்டிவிட முடிவெடுத்த ஆளும் கட்சி, விஷால் மற்றும் ஜெ.தீபாவின் மனுக்களை நிராகரி  செய்தனர். தன்னுடைய மனுவை ஏற்க வைப்பதற்காக விஷால் மேற்கொண்ட தலைகீழ் முயற்சிகளை யாரும் கண்டுகொள்ளவே இல்லை.

தமிழ் சினிமாவுக்கு ஏராளமான சலுகைகள் செய்திருக்கும் தமிழக அரசையும் எடப்பாடியையும் பாராட்டி விழா எடுக்கவேண்டும் என்று அரசு சார்பில் விஷாலிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அவர் அதனை கண்டுகொள்ளாமல் அசட்டையாக இருந்துவிட்டார். அதனால் விஷாலுக்கும் எடப்பாடி அரசுக்கும் கிட்டத்தட்ட முட்டல் மோதல் சமாச்சாரமாகத்தான் ஓடிக்கொண்டு இருக்கிறது. ஜெயலலிதா இருந்த நேரத்தில் அ.தி.மு.க. பெயரை உச்சரிக்கப் பயந்தவர்கள்கூட, இன்று முதலமைச்சருடன் மோதுவதற்குத் தயாராக இருக்கிறார்கள் என்பதைத்தான் விஷாலின் ட்வீட் இப்போது காட்டுகிறது.

ஆளும் கட்சிக்காக ஜெ. டி.வி. தொடங்குவதை மிகக்கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார் விஷால். மறைமுகமாக எல்லாம் தாக்காமல், நேரடியாகவே அ.தி.மு.க.வை தாக்கியிருக்கிறார். இப்போது விஷால் எதற்காக இதை செய்திருக்கிறார் என்று பார்த்தால்,  இந்த நேரத்தில் அ.தி.மு.க. அரசை எதிர்த்தால் மாவீரன் இமேஜ் வாங்கலாம் என்ற அற்பத்தனமான ஆசைதான்.

சர்கார் நேரத்தில் விஜய் வாய் பேசாமல் ஊமையாக இருந்து கோழை என்பதைக் காட்டிவிட்டார். இந்த நேரத்தில் தான் தைரியமாகப் பேசினால் போராளி இமேஜ் கிடைப்பதுடன், அடுத்தடுத்த பட புரமோஷன்களுக்கும் உபயோகமாகும் என்று நினைக்கிறார். ஏற்கெனவே வெட்டியாக ஒரு கொடியை உருவாக்கி வைத்திருப்பதால், இளிச்சவாய் தமிழன் தலையில் மிளகாய் அரைக்க விஷால் ரெடியாக இருக்கிறார்.

அ.தி.மு.க. அமைச்சர்கள் விஷாலை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதைப் பார்க்கலாம்...