1 மணி நேரத்துக்கு ரூ.5 லட்சம்! விஷாலின் புதுத் தொழில்! வெட்கமே இல்லாமல் ஒப்புக் கொண்ட கொடுமை!

1 மணி நேரத்துக்கு தான் ஐந்து லட்சம் ரூபாய் வசூல் செய்வது உண்மை தான் என்று நடிகர் சங்க பொதுச் செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் வெளிப்படையாக கூறியிருப்பது சர்ச்சையாகியுள்ளது.


சென்னை குளோபல் மருத்துவமனையில் ஆந்திராவை சேர்ந்த சிறுமி ஒருவருக்கு கல்லீரலில் ஏற்பட்ட பிரச்சனை சிக்கலான அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யப்பட்டது. மிகவும் ஏழ்மை நிலையில் இருந்த அந்த சிறுமிக்கான மருத்துவ செலவை சுமார் 1914 பேர் சேர்ந்து ஏற்றுக் கொண்டனர். இதனை தொடர்ந்து குளோபல் மருத்துவமனையில் தேர்ந்த மருத்துவர்கள் குழு 8 மணி நேரம் ஆப்பரேசன் செய்து அந்த சிறுமியை காப்பாற்றினார்.

   இந்திய அளவில் கல்லீரல் நோயை குணப்படுத்துவதில் சிறந்து விளங்கும் குளோபல் மருத்துவமனை சிறுமிக்கு கல்லீரலில் ஏற்பட்ட பிரச்சனையை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்த மருத்துவர்களுக்கு சென்னையில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஓட்டலில் பாராட்டு விழாவிற்கு ஏற்பாடுகள் செய்திருந்தன. அதாவது தங்கள் மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு தாங்களே பாராட்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தனர்.

   இந்த விழாவில் பங்கேற்று நடிகர் விஷால் மருத்துவர்களை பாராட்டுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திற்கு நடிகர் விஷால் வந்திருந்தார். அப்போது குளோபல் மருத்துவமனையில் சில மருத்துவர்கள் 5 லட்சம் ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு மருத்துவர்களை பாராட்டுவதற்கு விஷால் வந்திருப்பதாக பேசிக் கொண்டனர்.


   அதாவது ஒரு மணி நேரம் வந்து செல்ல ஐந்து லட்சம் ரூபாய் விஷாலுக்கு குளோபல் மருத்துவமனையால் வழங்கப்பட்டுள்ளது. இந்த பேச்சு நடிகர் விஷால் காதிலும் விழுந்துவிட்டது. இதனை தொடர்ந்து மேடையில் பேசிய அவர், மருத்துவர்களை பாராட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்க குளோபல் மருத்துவமனையிடம் 5 லட்சம் ரூபாய் பணம் வாங்கியது உண்மை தான் என்று ஒப்புக் கொண்டார்.

   இதனால் அங்கிருந்த பலரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். நிகழ்ச்சி முடிந்த பிறகு செய்தியாளர்கள் விஷாலை சூழ்ந்து கொண்டனர்.    மருத்துவமனையில் மருத்துவர்கள் புரிந்த சாதனையை பாராட்டுவதற்கு கூட பணம் வாங்க வேண்டுமா? என்று விஷாலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டவே ஐந்து லட்சம் ரூபாய் வாங்கியதாக கூறினார்.

   மேலும் புயலால்  பாதிக்கப்பட்ட மக்களுக் பிச்சை எடுக்க கூட தயங்கப்போவதில்லை என்றும் கூறி சமாளித்துவிட்டு சென்றார் விஷால்.   ஆனால் விஷால் பணம் வசூல் செய்ய ஒரு மணி நேரத்திற்கு 5 லட்சம் ரூபாய் என கட்டணம் நிர்ணயித்து புதிய தொழிலில் ஈடுபட்டுள்ளதாக கிசுகிசுத்துவிட்டு சென்றனர்.