முகூர்த்த நேரத்தில் விஷாகன் போட்ட திடீர் கண்டிசன்! பதற்றமான ரஜினி! சவுந்தர்யா வெளியிட்ட திடுக் தகவல்!

சவுந்தர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்ய விஷாகன் வணங்காமுடி நிபந்தனை போட்டதாக, தற்போது தகவல் வெளியாகியுள்ளது.


சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்தை, விஷாகன் வணங்காமுடி 2வது திருமணம் செய்துள்ளார். ஆனால், ஏற்கனவே சவுந்தர்யாவுக்கு முதல் கணவரின் மூலமாக, 3 வயது மகன் உள்ளார். அவரது பெயர் வேத் கிருஷ்ணா. இந்நிலையில், 2வது திருமணம் செய்வது பற்றி,  சவுந்தர்யா தனது மகனிடம் சொல்லித்தான் அனுமதி பெற்றுள்ளார்.

ஆனால், முகூர்த்த நேரத்தில், அந்த சிறுவனை சிறிது நேரம் காணவில்லையாம். இதன்பேரில், பலரும் அவரை தேடியுள்ளனர். அப்போது முகூர்த்தம் நெருங்கிவிட்டது. எனினும், சவுந்தர்யாவின் மகன் வேத் வராமல், தாலி கட்ட மாட்டேன் என, விஷாகன் வணங்காமுடி, தெரிவித்துள்ளார்.

சொன்னபடியே, சிறுவன் வரும்வரை, அவர் காத்திருந்து, பின்னர்தான் தாலி கட்டியுள்ளார். அந்த நேரத்தில், ''உன் அம்மாவை நான் திருமணம் செய்துகொள்ள உனக்குச் சம்மதமா,'' என விஷாகன் கேட்க, சிறுவன் வேத் தலையசைத்துள்ளார். இதனை பேட்டி ஒன்றில், சவுந்தர்யா நெகிழ்ச்சிபட கூறியுள்ளார்.

தனது திருமண காட்சியை, வீடியோ எடுத்து வைத்துள்ளதாகவும், மகன் வேத் 18 வயது எட்டியபின், அந்த வீடியோவை மீண்டும் போட்டுக் காட்டுவேன் எனவும் சவுந்தர்யா தெரிவித்துள்ளார்.