உயிரிழந்த C.R.P.F வீரர்களின் பிள்ளைகளின் கல்வி செலவை ஏற்கும் சேவாக்!

காஷ்மீர் தாக்குதலில் மரணமடைந்த C.R.P.F ராணுவ பாதுகாப்பு படை வீரர்களின் பிள்ளைகளின் கல்வி செலவை அவருடைய சேவாக் இன்டர்நேஷனல் பள்ளியின் மூலமாக தானே கவனித்து கொள்வதாக இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் விரேந்தர் சேவாக் அறிவித்துள்ளார்.


இரண்டு நாட்களுக்கு முன்பு காஷ்மீரில் C.R.P.F வீரர்கள் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் இந்தியாவின் C.R.P.F வீரர்கள் 42 பேர் மரணமடைந்தனர்.

இந்த செய்தி நாட்டையே உலுக்கியது. இதனால் அவர்களில் குடும்பம் துயரா சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். பல குடும்பங்களில் பிள்ளைகள் தங்களது அப்பாவை இழந்துள்ளனர்.

அவர்களின் குடும்பத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்தர் சேவாக் ஒரு அறிக்கையை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

மரணமடைந்த வீரர்களுக்கு ஈடாக என்ன செய்தாலும் அவர்களுக்கு தானே அது இணையாகாது. ஆகையால் அவர்களது பிள்ளைகளின் கல்வி செலவை தானே தனது இன்டர்நேஷனல் பள்ளியின் வாயிலாக முழுவதுமாக ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார்.