சர்ச்சைக்குரிய முறையில் அவுட்டான ஜடேஜா! கடுப்பான விராட் கோலி! என்ன சொன்னார் தெரியுமா?

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் ரவீந்திர ஜடேஜா ரன் அவுட்டான விதம் பற்றி இந்திய அணி கேப்டன் விராட்கோலி அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார்.


இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்யும்போது ரவீந்திர ஜடேஜா சர்ச்சைக்குரிய முறையில் ரன் அவுட் ஆனார்.

மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் ஜடேஜாவின் ரன் அவுட்க்கு அப்பீல் செய்தனர். மைதானத்தில் இருந்த நடுவர் நாட் அவுட் என்று கூறிவிட்டார். ஆனால் மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த டிவியில் ரி ப்ளே பார்த்து மேற்கு இந்திய தீவுகள் அணியின் கேப்டன் பொல்லார்ட் நடுவரிடம் முறையிட்டார். இதனால் மூன்றாவது அம்பையர் செக் செய்து ரவீந்திர ஜடேஜா ரன்அவுட் என்று முறைப்படி அறிவித்தார்.

இதனை பார்த்துக் கொண்டிருந்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கடுப்பாகி டிரசிங் ரூமுக்கு சென்று விட்டார். ஆட்டம் முடிவடைந்ததும் இதைப் பற்றி பேசிய விராட் கோலி மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் ரன்அவுட் அப்பிள் செய்ததற்கு நடுவர் நாட் அவுட் என்று கூறிவிட்டார்.

பின்பு டிவி ரீ ப்ளே பார்த்து அவுட் அப்பிள் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று விராட் கோலி அதிரடியாக கருத்துக் கூறினார். மேலும் கிரிக்கெட் வரலாற்றில் இதுபோன்ற நடந்தது இல்லை எனவும் அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.