தென் ஆப்பிரிக்க அணியை தெறிக்கவிட்ட விராட்கோலி!

இந்திய தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் தென்ஆப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்துள்ளது.


முன்னதாக முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி தனது இரண்டாம் நாள் ஆட்டத்தை இன்று காலையில் தொடங்கியது . தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சை அடித்து நொறுக்கியது .

இந்தியன் கேப்டன் விராட் கோலி ஆட்டமிழக்காமல் 254 ரன்களை குவித்தார். டெஸ்ட் போட்டிகளில் இது விராட் கோலியின் ஏழாவது இரட்டை சதம் என்பது குறிப்பிடத்தக்கதாகும் . ரவீந்திர ஜடேஜா அதிரடியாக விளையாடி 91 ரன்களை குவித்தார் .இதனால் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 601 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. தென்ஆப்பிரிக்க அணியின் சார்பாக ரபடா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்ரிக்கா அணி தொடக்கம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட் இழப்பிற்கு 36 ரன்களை எடுத்துள்ளது. இந்தியனின் உமேஷ் யாதவ் 2 விக்கெட்களையும் , ஷமி 1 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.