கணவன் விராட் கோலிக்காக மனைவி அனுஷ்கா ஷர்மா எடுத்த திடீர் முடிவு! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் அனுஷ்கா சர்மா. இவருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னால் திருமணம் ஆனது.


 இருவரும் 2012 முதல் 2014 வரை காதலித்து வந்தனர் .அதன்பிறகு இருவரும் பிரேக்கப் செய்து கொண்டு விளகினர். அதனை தொடர்ந்து மீண்டும் இணைந்து இருவரும் ஒரு வருடம் கழித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். விராட் கோலி வெளிநாடுகளுக்கு எங்கு சென்று கிரிக்கெட் விளையாடினாலும் அவருடனேயே சென்று அவரை உற்சாகப்படுத்துவது அனுஷ்கா சர்மாவின் வழக்கம். மேலும் தனது பட வேலைகள் இருந்தாலும் அனைத்தையும் விட்டுவிட்டு விராட் கோலிக்காக வந்துவிடுவார் அனுஷ்கா சர்மா.

இந்நிலையில் பாலிவுட்டில் இருந்து அனுஷ்கா சர்மா விலகுவதாக தெரிகிறது, ஏனெனில்ம் இன்னும் சில நாட்களில் உலக கோப்பை தொடர் துவங்க உள்ளது, இதற்காக விராட் கோஹ்லியை உற்சாகப்படுத்த வேண்டும் என்ற நினைப்பில் இருக்கிறாராம் அனுஷ்கா சர்மா, மேலும் தனது கணவர் விராட் கோலியுடன் நேரம் செலவிட வேண்டும் என்று நினைத்து வருகிறாராம்,

மற்றொரு விஷயமென்னவென்றால் ஏற்கனவே அனுஷ்கா ஷர்மா விராட் கோலியின் மூலம் கர்ப்பமாகி உள்ளதாக தெரிகிறது, இதன் காரணமாக தான் தற்போது நடித்துள்ள ஜீரோ என்ற படத்தை தவிர மற்றப் படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார் என்ற செய்தியும் வந்துகொண்டிருக்கிறது, இதனால் பாலிவுட்டில் இருந்து விலகி குடும்பம் குட்டி என செட்டிலாகப் போகிறார் அனுஷ்கா சர்மா என பாலிவுட்டில் செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கிறது,