விராட் கோலி சிறுபிள்ளைத் தனத்துடன் நடந்து கொள்வார்! ரபாடா வெளியிட்ட ஷாக் தகவல்!

தென்னாபிரிக்கா அணியின் வேக பந்து வீச்சாளர் ரபடா, இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி மைதானத்தில் சிறு பிள்ளை தனமாக நடந்துகொள்வார் என்று அதிரடியாக விமர்சித்துள்ளார்.


உலகின் தற்போதய தலைசிறந்த வேக பந்து வீச்சாளர்களில் தென்னாபிரிக்கா அணியின் காகிஸோ ரபடாவும் ஒருவராவார். இவர் சமீபத்தில் நடந்து முடிந்த IPL போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக  விளையாடி சிறப்பாக பந்து வீசி 12 போட்டிகளில் 25 விக்கெட்களை வீழ்த்தினார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோஹ்லியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் வேக பந்து வீச்சாளர் ரபடாவும் ஒரு ipl போட்டியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அந்த சம்பவம் பற்றி கூறிய ரபடா, ipl தொடரின் ஒரு போட்டியில் விராட் கோஹ்லிக்கு நான் பந்து வீசும் போது, ஆட்டத்தில் வெற்றி பெறுவதற்கு திட்டங்களை நினைத்து, அதை மனதில் வைத்து பந்து வீசினேன். ஆனால் விராட் கோஹ்லி நான் வீசிய பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார். மேலும் என் அருகே வந்து ஒரு சில வார்தைகளை கூறிவிட்டு சென்றார். பதிலுக்கு நானும் ஏதாவது பேசினால் உடனே அவர் கோவம் அடைந்து சிறு பிள்ளை தனமாக  நடந்துகொள்கிறார் .

உண்மையிலே விராட் கோஹ்லி ஒரு தலை சிறந்த பேட்ஸ்மேன் தான். ஆனால் அவரிடம் தவறான முறையில் ஏதாவது பேசினால் அதை அவரை தாங்கிக்கொள்ள முடியாமல் சுலபமாக கோவம் அடைந்து விடுகிறார் என்றும் தென்னாபிரிக்கா அணியின் ரபடா கூறியுள்ளார். விராட் கோஹ்லி பற்றி ரபடா கூறிய கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் மோதும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 5ம் தேதி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.