ஆஸ்திரேலியாவை தெறிக்கவிட்டு கோலி படைத்த மெர்சலான சாதனை!

3வது வருடமாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மிக முக்கியமான சாதனையை படைத்துள்ளார்.


2018ம் வருடம் மட்டும் ஒரு நாள், டெஸ்ட் மற்றும 20 ஓவர் போட்டிகள் என அனைத்துவிதமான சர்வதேச போட்டிகளிலும் விராட் கோலி அசத்தியுள்ளார். வழக்கம் போல ரன் எடுக்கும் மெசினாக அவர் ரன்களை குவித்து வருகிறார். முன்னணி அணியாக இருந்தாலும் சரி, கத்து கட்டி அணியாக இருந்தாலும் சரி ரன்களை மட்டும் கோலி அவர்களுக்கு எதிராக குவிக்க தவறியதே இல்லை.

  இதே போல் இந்தியாவில் விளையாடினாலும் சரி வெளிநாடுகளில் விளையாடினாலும் சரி கோலி தனது பேட்டால் எதிரணி வீரர்களின் பந்தை பவுண்டரிகளுக்கு விரட்டி விரட்டி அடித்துள்ளார். மேலும் டெஸ்ட், ஒருநாள், 20 ஓவர் என அனைத்து வகை போட்டிகளிலும் பாரபட்சம் பார்க்காமல் கோலி ரன்களை குவித்துள்ளார். அந்த வகையில் 2018ம் ஆண்டு மட்டும் கோலி 2653 சர்வதேச ரன்களை குவித்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 69.81 ஆகும்.

   இதன் மூலம் 2018ம் ஆண்டு அதிக சர்வதேச ரன்களை குவித்த வீரர் என்கிற பெருமை கோலிக்கு கிடைத்துள்ளது. இந்த சாதனையை அவர் 2018ல் மட்டும் படைக்கவில்லை. 2016ம் ஆண்டும் அதிக சர்வதேச ரன்களை குவித்த வீரர் நம்ம கோலி தான். 2017ம் ஆண்டும் அதிக சர்வதேச ரன்களை சேர்த்தவர் நம்ம கேப்டன் கோலி தான்.

   2019 புத்தாண்டிலும் கோலியின் அதிரடி தொடர்ந்து இந்த சாதனையை அவர் தக்க வைக்க வேண்டும் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாகும்.