எனக்கு மட்டும் சிறுசு! என் தங்கச்சிக்கு ரொம்ப பெருசு! ராகுல் காந்தி ஏக்கம்!

தனக்கு மட்டும் எப்போதும் சிறியதாகவே கிடைப்பதாகவும் தனது சகோதரிக்கு எப்போதும் பெரியதாகவே கிடைப்பதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இயக்கம் தெரிவித்துள்ளார்.


உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் சூறாவளி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். உத்தர பிரதேசத்தில் இருக்கும் இருவருமே காண்போர் விமான நிலையத்திலிருந்து தத்தமது பிரச்சார இடங்களுக்கு செல்ல வேண்டிய சூழல் இருந்தது. இதற்காக ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியின் காண்போர் விமான நிலையத்திற்கு வந்து இருந்தனர்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த விமானத்தில் ஏறி ராகுல் காந்தி பறக்க வேண்டும். அதேசமயம் பிரியங்கா காந்திக்கு அங்கு ஒரு பிரம்மாண்ட ஹெலிகாப்டர் தயாராக இருந்தது. இதனைப் பார்த்த ராகுல் காந்தி தான் நீண்ட தொலைவில் செல்ல வேண்டி இருந்தாலும் தனக்கு சிறிய விமானமே கிடைப்பதாகவும் ஆனால் குறுகிய தொலைவு மட்டுமே செல்ல வேண்டிய பிரியங்கா காந்திக்கு பெரிய ஹெலிகாப்டர் கிடைப்பதாகவும் கூறி வருத்தப்பட்டார்.

இது விமானத்தில் மட்டுமல்ல எப்போதுமே இதே நிலைதான் தங்களுக்கு என்று கூறி தனது இயக்கத்தையும் ராகுல் காந்தி செல்லமாக வெளியிட்டார். சகோதர பாசத்துடன் தனது தங்கையிடம் நையாண்டி செய்த ராகுல் காந்தியின் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.