கரும்பு கொடுத்தது யாரு...? பழனிசாமி தாத்தாவா..? வைரலாகும் சிறுவன் வீடியோ

கள்ளம் கபடு இல்லாமல் உண்மையைச் சொல்வதுதான் மழலைகளின் குணம். அப்படியொரு வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. ஆம், பழனிசாமி தாத்தா கரும்பு கொடுத்தார் என்று சொல்லும் அந்த வீடியோ, தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு மக்களிடம் கிடைத்திருக்கும் பாராட்டாகவே தெரிகிறது.


தை பொங்கலை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2 ஆயிரத்து 500 ரூபாயுடன் கரும்பு உள்ளிட்ட பொருட்களை தமிழக அரசு இலவசமாக வழங்கி வருகிறது. பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்தத் திட்டம், தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. 

எங்கும் முதலமைச்சர் பழனிச்சாமி பற்றிய பேச்சாக இருப்பதே இதற்குக் காரணம். இந்த கள எதார்த்தத்தை அப்படியே பிரதிபலிக்கிறது அந்த வீடியோ. குழந்தை ஒன்று கரும்புத் துண்டை அப்படியும் இப்படியுமாக புரட்டிக் கொண்டிருக்க, அருகிலிருக்கும் ஒரு பெண் ‘’ கரும்பு யார் தந்தா?’’ என கேட்கிறார். நொடிப் பொழுது கூட தாமதிக்காமல் அந்த குழந்தை, ‘’பழனிச்சாமி தாத்தா’’ என பதிலளிக்கிறது.

பலமுறை கேட்டும் சலிக்காமல் அதே பதிலை தருகிறது குழந்தை. ஒரு கட்டத்தில், ‘’ யார் தந்தா?’’ என கேள்வி வர, கொஞ்சம் கடுப்பான குழந்தை, ‘’பழனிச்சாமி தாத்தா’’ என குரல் உயர்த்துகிறது. அரசியல் என்றால் என்னவென்றே தெரியாத அந்த பிஞ்சு குழந்தையின் மனதிலும் முதல்வர் பழனிச்சாமியின் பெயர் ஆழமாகப் பதிந்திருப்பது, உயர உயர செல்லும் அவரது செல்வாக்கிற்கு சரியான அத்தாட்சி என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். 

இந்த குழந்தைக்குத் தெரியும் உண்மை பெரியவர்களுக்குத் தெரிந்தால் சரிதான்.