விரக்தியின் உச்சத்தில் விராட்!ஆண்ட்ரே ரஸ்ஸலை வீழ்த்த ஸ்கெட்ச் போடும் ரஹானே!

இன்று IPLல் இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ள போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்த்து மோதவுள்ளது. இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ள போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து மோதவுள்ளது.


டெல்லி கேபிட்டல்ஸ் அணி இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 2 போட்டிகளில் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் 6வது இடத்தில உள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை விளையாடிய 5 போட்டிகளிலும் தோல்வியை தழுவி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

கடைசி போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற வேண்டிய வாய்ப்பை இழந்து தோல்வியை தழுவியது. பந்து வீச்சில் எந்த பவுலரும் சரியாக செயல்படுவதில்லை. இதனால் 200 ரன்கள் எடுத்தால் கூட ராயல் சேலஞ்சர்ஸ் அணி பந்து வீச்சு சரி இல்லாமல் தோல்வியை தழுவி வருகிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பொறுத்த அவரை ரஸ்ஸல் விக்கெட்டை எடுத்து விட்டால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்வது சுலபம். ஆகவே ரஹானே அவரை வீழ்த்துவதற்கு வியூகங்களை செய்து வருகிறார்.