விதைப்பந்துக்கள் உடன் கூடிய விநாயகர் சிலைகள் நீலகிரி மாவட்டத்தில் அறிமுகம் !

ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை கோலாகலமாக கொண்டாடிய பின்பு களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பது வழக்கமாக கொண்டுள்ளோம்.


நீலகிரி மாவட்டத்தில் களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகளை விதை பந்துகளை வைத்து தயாரிக்க வேண்டும் என்று அந்த மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா  உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தின் பசுமை பரப்பை அதிகரிக்கவும் ஏற்கனவே உள்ள பசுமை பரப்பை பாதுகாக்கவும் எடுக்கப்பட்டுள்ள புதிய முயற்சி தான் இது என்று மாவட்ட ஆட்சியர் சார்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

"பசுமை நீலகிரி " என்ற திட்டத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு முதல் நீலகிரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்திக்கு விற்பனை செய்யப்படும் விநாயகர் சிலைகளை விதைப் பந்துகளுடன் நீர் நிலைகளில் கரைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் நம்முடைய சுற்றுச்சூழலை மாசுபடாமல் நம்மால் பாதுகாக்க இயலும். மேலும் வழிபாட்டுக்குப் பின்னர் சிலைகளை தண்ணீரில் கரைக்கும்போது விதைகள் பரவி முளைத்து மாவட்டத்தின் மற்ற பகுதிகளிலும் பசுமை அதிகரிக்க ஏதுவாக அமையும் என்றார்.

நாடு முழுவதிலும் விநாயகர் சிலைகளை விற்கும் அனைத்து இடங்களிலும் இதைப் பின்பற்றினால் நம்முடைய சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.