விநாயகர் தோன்றிய வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள் !

விநாயகர் அவதரித்த திதியே வினாயகர் சதுர்த்தி என அனைவராலும் பின்பற்றப்பட்டு வருகிறது என்று புராணங்கள் கூறுகின்றன .


ஒரு சமயம் சிவபெருமான் வெளியே சென்றபோது , பார்வதி தேவி நீராடச் சென்றிருந்தார். அப்போது தனது காவலுக்காக யாரும் இல்லை என்பதை உணர்ந்த பார்வதிதேவி , நீராடுவதற்காக வைத்திருந்த சந்தன குழம்பை எடுத்து ஒரு உருவம் செய்து அதற்கு உயிரூட்டினார் . பார்வதி தேவியால் உயிரூட்டபட்டதால் அவரின் முதல் குழந்தையானார் பிள்ளையார்.

எவரையும் உள்ளே அனுமதிக்காதே என்று பிள்ளையாரிடம் கூறிவிட்டு பார்வதிதேவி நீராடச் சென்றுவிட்டார். அச்சமயத்தில் அங்கே வந்த சிவபெருமானை உள்ளே செல்ல அனுமதிக்காததால் சிவபெருமானுக்கும் பிள்ளையாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதனால் கோபமடைந்த சிவபெருமான் பிள்ளையாரின் தலையை வெட்டி உள்ளே சென்றார் . பின்னர் பார்வதி தன்னால் உருவாக்கப்பட்ட குழந்தை பிள்ளையார் என்று கூறியதும் , உண்மையை அறிந்த சிவபெருமான் யானைத் தலையை விநாயகருக்கு பொருத்தி அவரை உயிர்பெற செய்தார் . இதுவே விநாயகர் தோன்றிய வரலாறாக புராணங்களில் கூறப்பட்டு வருகிறது.