விநாயகர் சதுர்த்தி விழாவை கோலாகலமாக கொண்டாடும் மாநிலங்கள் எவையெல்லாம் !

இந்தியாவிலுள்ள பல மாநிலங்களில் ஒப்பிட்டு பார்க்கையில் மகாராஷ்ட்ரா, தெலுங்கானா , ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் கோவா போன்ற மாநிலங்களில் விநாயகர் விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.


இந்திய மாநிலங்கள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் மொரீசியஸ், மலேசியா , கனடா போன்ற நாடுகளிலும் விநாயகர் சதுர்த்தி விழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுவாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் ஆனது தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் பந்தல்கள் அமைக்கப்பட்டு மிகப்பெரிய விநாயகர் சிலைகளை வைத்து கொண்டாடப்படும் . இந்த விநாயகர் சிலைகளுக்கு சுமார் 10 முதல் 14 நாட்கள் வரை பூஜைகள் செய்யப்பட்டு இறுதியில் கடைசி நாளன்று அந்த சிலைகள் கடலிலோ அல்லது ஆற்றிலோ கரைக்கப்படும் இதுதான் வழக்கமாக நடைபெற்று வரும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் ஆகும். 

மகாராஷ்டிரா மாநிலத்தை பொறுத்தவரையில் இந்தியாவிலேயே இந்த மாநிலத்தில் தான் விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக மும்பை மாநகரில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பான பந்தல்கள் அமைத்து மேளதாளங்கள் முழங்க விநாயகருக்கு பூஜைகளும் கொண்டாட்டங்களும் நடைபெறும். மும்பை மாநகரின் பிரபலமான கடற்கரைகளில் ஒன்றான 'கிர்கவ்ம் சௌபாட்டி' என்ற இடம் விநாயகர் சிலையை கிடைப்பதற்கு மிகவும் பிரபலமான இடமாகும். ஒவ்வொரு ஆண்டும் 10,000க்கும் மேற்ப்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகின்றன.

இந்தியாவின் மிக அழகான மாநிலமாக கோவா கருதப்படுகிறது இந்த மாநிலத்தில் மிகவும் அதிக எண்ணிக்கையில் கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்துக்களின் பண்டிகைகளும் இங்கு வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அந்த வகையில் கொண்டாடப்படும் ஒரு மிகப்பெரிய விழா தான் விநாயகர் சதுர்த்தி . விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பலவிதமான வான வேடிக்கைகளும் நிகழ்ச்சிகளும் கோவா மாநிலத்தில் மிகவும் சிறப்பாக நடைபெறும். மேலும் இங்கு விநாயகர் சதுர்த்திக்கு மறுநாள் 'நவ்யசி பஞ்சம்' என்றழைக்கப்படும்  அறுவடை திருநாள் கொண்டாடப்படுகிறது.

இதேபோல் குஜராத், ஒடிசா போன்ற மற்ற வட மாநிலங்களிலும் விநாயகர் சதுர்த்தி விழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.