மகாபாரதத்தை எழுதிய விநாயகப்பெருமான் !

வியாசர் மகாபாரத கதைகளை கூற கூற அதை எழுதி முடித்தவர் விநாயகர்.


மகாபாரதத்தை தாமே பாடி எழுதினால் ,பாடுகின்ற வேகம் குறையும் என்ற காரணத்தினால் மகாபாரதத்தை எழுதுவதற்கு வியாசர் யார் பொருத்தமாக இருப்பார் என்று தேடி வந்த நிலையில் வியாசரின் நினைவில் தோன்றியவர் தான் விநாயகர் .

விநாயகரின் எழுத்தாற்றல் நன்கு உணர்ந்த வியாசர் விநாயகரிடம் நான் மகாபாரதத்தை பாட அதை நீங்கள் எழுதி தருமாறு வேண்டினார் .வியாசரின் வேண்டுதலை ஏற்ற விநாயகர் மகாபாரதத்தை வியாசர் பாடலாக சொல்ல சொல்ல அதை எழுதினார். இவ்வாறு விநாயகர் உருவான காவியம் தான் மகாபாரதம்.