விநாயகருக்கு தேங்காய் உடைப்பது இதற்காக?

விநாயகர் மூர்த்தியிலுள்ள ஒவ்வொரு சின்னச்சமாசாரத்தைக் கவனித்தாலும் அதில் நிறையத் தத்துவங்கள் இருக்கின்றன.


பிள்ளையாருக்கு தேங்காய் உடைப்பது எதற்காக?  விக்கினேஸ்வரர், தம் அப்பாவான ஈஸ்வரனை பார்த்து, உன் சிரசையே எனக்கு பலி கொடு என்று கேட்டு விட்டாராம்.  எல்லாவற்றையும் காட்டிலும் உயர்ந்தது எதுவோ அதைத் தியாகம் பண்ணினால்தான் மகா கணபதிக்குப் பிரீதி ஏற்படுகிறது.  அவ்வளவு பெரிய தியாகம் பண்ணுவதற்குத் தயார் என்ற அறிகுறியாகத்தான் ஈஸ்வரனை போலவே மூன்று கண்கள் உடைய தேங்காயைச் சிருஷ்டித்து அந்தக் காயை அவருக்கு நாம் அர்ப்பணம் பண்ணும்படியாக ஈசுவரன் அநுக்கிரகித்திருக்கிறான்.

விநாயகர் பிரணவ ஸ்வரூபி. நமக்கு பார்க்கப் பார்க்க அலுக்காத வஸ்துகள் சந்திரன், சமுத்திரம், யானை ஆகியன.  இவற்றையெல்லாம் பார்க்க பார்க்க ஆனந்தம் பொங்கும்.  அதனால்தான் குழந்தைச் சுவாமி தன்னைப் பார்க்கிற ஜனங்களுக்கு எல்லாம் பார்க்க பார்க்க ஆனந்தம் எப்போதும் பொங்கிக் கொண்டிருக்கும்படியாக யானை உருவத்தோடு இருக்கின்றார். அது ஆனந்த தத்துவம்.

எந்த சுவாமியை உபாசிப்பதானாலும் முதலில் விநாயகருடைய அநுக்கிரகத்தைப் பெற்றுக் கொண்டால் தான் அந்தக் காரியம் விக்கினம் இல்லாமல் நடைபெறும்.  தோர்பி கர்ணம் என்பதே தோப்புக் கரணம் என்று மாறியது.  தோர்பி என்றால் கைகளினால் என்று அர்த்தம்.  கர்ணம் என்றால் காது. தோர்பி கர்ணம் என்றால் கைகளால் காதைப் பிடித்துக் கொள்வது. 

இத்தகைய பெருமை கொண்ட விநாயகரை அனுதினமும் துதிப்போமாக!