அண்ணா நகரில் என்கவுண்டர்! சென்னையில் வேட்டையாடப்பட்ட விழுப்புரம் தாதா சாரை மணிகண்டன்!

விழுப்புரம் மாவட்டத்தில் பிரபல ரவுடியாக விளங்கி வந்த சாரை மணிகண்டனை சென்னையில் வைத்து போலீசார் சிறப்பான என்கவுண்டர் செய்துள்ளனர்.


மணிகண்டன் இல்லை சாரை மணிகண்டன் என்று சொன்னால் விழுப்புரத்தில் அதிக பரிட்சியம். இவன் மீது 10 கொலை வழக்குகள் உள்ளன. இது தவிர கொள்ளை, ஆட்கடத்தல் என்று சாரை மணிகண்டன் விழுப்புரம் மாவட்டத்தையே பீதியில் ஆழ்த்தி வந்த தாதாவாக இருந்தான். விழுப்புரம் மாவட்ட விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு ரவுடிகளை முன்னெச்சரிக்கை நடவடிக்ககையாக கைது செய்ய எஸ்பி ஜெயக்குமார் உத்தரவிட்டிருந்தனர். அதன்படி சாரை மணிகண்டனை போலீசார் தேடி வந்தனர். அவன் சென்னை அண்ணா நகரில் பதுங்கியிருப்பது தெரியவந்தது.

இரண்டு முறை அவனை பிடிக்க போலீசார் முயற்சி மேற்கொண்ட போதும் தப்பியுள்ளான். இந்த நிலையில் விழுப்புரம் - புதுச்சேரி எல்லையில் உள்ள ஆரோவில் பகுதி எஸ்ஐ பிரபு உள்ளிட்ட போலீசார் மணிகண்டன் தங்கியிருந்த இடத்தை சுற்றி வளைத்தனர்.

சரண் அடையும் படி கேட்ட போது மறுத்த மணிகண்டன் தான் வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் போலீசாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் எஸ்ஐ பிரபுவுக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நடைபெற்ற என்கவுண்டரில் சார மணிகண்டன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான்.

சென்னையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் அண்ணா நகரில் நடைபெற்ற என்கவுண்டர் பரபரப்பை அதிகமாக்கியது.