விழுப்புரத்தில் கொரோனா இல்லை என நேற்று இரவு ஒருவர் விடுவிக்கப்பட்டதாகவும், ஆனால் பரிசோதனை முடிவில் அந்த நபருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கொரோனாவுடன் தப்பிய ஓடிய இளைஞர்..! விழுப்புரம் முழுவதும் அலர்ட்..! யார், எப்படி தெரியுமா?
டெல்லியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் தென்பட்டதால் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று நேற்று இரவு மருத்துவமனையில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் உடனடியாக போலீசாருக்கு அந்த நபரைப் பற்றிய தகவலை தெரிவித்துள்ளனர். இதனால் விழுப்புரம் மாவட்ட போலீசார் 3 தனிப்படை அமைத்து அந்த நபரை தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவமனைகளில் உள்ள அதிகாரிகளின் கவனக்குறைவால் அவர் விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்டு வருகிறது.
போலீசாரால் தேடப்பட்டு வரும் டெல்லி வாலிபரருக்கு ஏற்கனவே கொரோனா இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும், ஆனால் திடீரென்று அவர் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடியதாகவும் கூறப்பட்டு வருகிறது.இதனால் சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் அவரை தேடி பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர் எனவும் கூறப்பட்டு வருகிறது.