வீடு கட்ட தரையோடு தரையாக வயர் மூலம் கரண்ட் கனெக்சன்! அதிகாலையில் 2 பேருக்கு ஏற்பட்ட பயங்கரம்! தருமபுரி அதிர்ச்சி!

மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவமானது தர்மபுரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தர்மபுரி மாவட்டத்தில் வெண்ணாம்பட்டி எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு பழனி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய நண்பரின் பெயர் தேவராஜன். இவர்களது வீட்டிற்கு அருகே கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. அங்கிருந்து எடுக்கப்பட்ட வயர்கள் நடுரோட்டில் கிடந்ததன. இந்நிலையில் இரவு நேரத்தில் பெய்த மழையின் காரணமாக வயர்களுக்கு சுற்றி சகதி மண்டி கிடந்தது. இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல பழனி சாணத்தை எடுத்துக்கொண்டு நடந்து கொண்டிருந்தார். 

அப்போது எதிர்பாராவிதமாக சகதியில் காலை வைத்தார்.  மழை காரணமாக வயர்களில் மின்கசிவு ஏற்பட்டிருந்தது. இதனால் பழனி காலை வைத்தவுடன் வயர்களிலிருந்து அவருடைய உடலில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனால் அலறி துடித்தார்.

அவருக்கு அருகே இருந்த நண்பரான தேவராஜன் அவரை மீட்பதற்காக முயற்சி செய்த போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இருவரின் கூட்டு அலறல்களையும்  கேட்ட அக்கம்பக்கத்தினர் மின் இணைப்பை துண்டித்து இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது தர்மபுரி மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.