வீட்டுக்கு முன் வேப்பிலை..! மஞ்சள் நீர்.! கொரோனாவை வீழ்த்த களம் இறங்கிய கிராம மக்கள்!

கொரனா பாதிப்பு ஏற்படாமல் இருக்க தமிழகத்தில் பல கிராமங்களில் பெண்கள் தங்கள் இல்லங்களில் மஞ்சள் கலந்த நீரை தெளித்து கோலம் போட்டு வருகின்றனர்.


   மஞ்சள் கலந்த நீரை தெளிப்பதால் சிறுசிறு நச்சுப் பூச்சிகள், ஈக்கள், கிருமிகள் வீட்டுக்குள் நுழையாது என்பதால் நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்தனர். காலப்போக்கில் நாகரிகம் என்ற பெயரில் அதை கைவிட்டதால் அழையா விருந்தாளிகளாக பல வைரஸ்கள் வீட்டிற்குள் நுழைந்து பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

இதுபோன்று மஞ்சள் நீரை தெளிப்பதால் நோய்த்தொற்று பரவாது என்பது நம் முன்னோர்களின் அறிவுரை. அந்த வழக்கை தற்போது கிராமங்களில் உள்ள மக்கள் கடைப்பிடித்து வருகின்றனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான ரயில்வே நிலையம், பேருந்து நிலையம் உட்பட பல்வேறு இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தி உள்ளது.

அதே சமயம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் கொரோனா பாதிப்புகளை தவிர்க்க கிராமத்துப் பெண்கள் தங்கள் வீட்டு வாசலில் மஞ்சள் மற்றும் வேப்பிலை கலந்த நீரை தெளிக்கின்றனர். தாம்பரம் அருகே முடிச்சூர் பகுதியிலும் பெண்கள் தங்கள் வீட்டின் முன்பு மஞ்சள் கலந்த தண்ணீரை தெளித்து வருகின்றனர்.  

இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக சென்னை உள்ளிட்ட நகரங்களிலும் வேப்பிலை கலந்த தண்ணீர் மற்றும் மஞ்சள் கலந்த தண்ணீரை வீட்டு வாசலில் தெளித்து வருகின்றனர். இதற்கு பல தரப்பினர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.