நிலவில் கண்டுபிடிக்கப்பட்டது சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டர்! ஆர்பிட்டர் புகைப்படம் எடுத்து அனுப்பியது!

விக்ரம் லாண்டரின் இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளது இந்திய மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


உலகம் முழுவதும் நேற்று முன்தினம் இந்தியாவை உற்று நோக்கி கொண்டிருந்தது. சந்திராயன்-2 விண்கலம் நிலவில் சென்றடைய வேண்டிய நாள் நேற்று முன்தினம். தேவையான இடத்தில் வேகத்தை அதிகரிக்கும், இக்கட்டான நிலைகளில் வேகத்தை குறைத்தும் விஞ்ஞானிகள் மிகவும் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ஆனால் அனைவரின் எதிர்பார்ப்பை மறுக்கும் வகையில் 2.1 கிலோ மீட்டர் தொலைவில் விக்ரம் லாண்டர் தகவல் தொடர்பை இழந்தது. 

இது எதிர்பார்ப்பிலிருந்த கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்தது. இஸ்ரோ நிறுவன தலைவர் சிவன் ததும்ப ததும்ப குரல் குழைந்து பேசினார். அவரின் கண்களில் கண்ணீர் பெருகியது. உடனடியாக பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு ஆறுதல் தெரிவித்தார். 

இதனால் விக்ரமின் தொடர்பை இஸ்ரோ நிறுவனம் இழந்தது. இந்நிலையில் விக்ரம் லாண்டரின் தெர்மல் புகைப்படத்தை ஆர்பிட்டர் அனுப்பியுள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. ஆனால் லாண்டருடன் இன்னும் தொடர்பு ஏற்படவில்லையென்று  சிவன் கூறியுள்ளார்.

இந்த செய்தியானது இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பெரும் உத்வேகத்தை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.