நாளுக்கு நாள் மோசமாகும் கேப்டன் உடல் நிலை! வெளியானது வீடியோ ஆதாரம்!

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் குடியரசு தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள வீடியோ மூலமாகவே அவரது உடல் நிலை எந்த அளவிற்கு மோசமாகியுள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது.


கடந்த இரண்டு ஆண்டுகளாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள விஜயகாந்தை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதும் வீட்டிற்கு திருப்பி அழைத்து வருவதுமாக அவரது குடும்பத்தினர் பார்த்து வருகின்றனர். கடந்த மூன்று மாதத்திற்கு முன்னதாக கேப்டன் உடல் நிலை மோசமாகிவிட்டதாகவும் அவர் ராமாவரத்தில் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

 

  ஆனால் இந்த தகவலை விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் உடனடியாக மறுத்து வீடியோ வெளியிட்டார். அவர் கூறியதை போலவே கேப்டன் மறுநாள் வீட்டிற்கு திரும்பினார். அவரை அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர் பார்த்திபன் உள்ளிட்டோர் பார்த்துவிட்டு திரும்பிய போது எடுத்த புகைப்படம் வெளியானது. இதனால் விஜயகாந்த் உடல் நிலை தேறி வந்ததாக கூறப்பட்டது.

 

   இந்த நிலையில் திடீரென கடந்த மாத துவக்கத்தில் விஜயகாந்தை சிகிச்சைக்காக அவரது மனைவி பிரேமலதா அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு நியுயார்க்கில் விஜயகாந்திற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் விஜயகாந்தோ கிறிஸ்துமஸ் கொண்டாடுவது, பனிமழையை ரசிப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

 

   மேலும் அமெரிக்காவில் அக்வாமேன் திரைப்படம் பார்ப்பது போன்ற புகைப்படத்தையும் விஜயகாந்த் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். இந்த நிலையில் விஜயகாந்த் குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியிட்ட வீடியோ தான் அவர் உடல் நிலை எந்த அளவிற்கு மோசமாக உள்ளது என்பதை தெரிவிக்கும் வகையில் உள்ளது.

 

   அதாவது குடியரசு தினத்தை முன்னிட்டு விஜயகாந்த் வெளியிட்டுள்ள வீடியோ 22 நொடிகள் ஓடக்கூடியதாக உள்ளது. இந்த 22 நொடிகள் ஓடக் கூடிய வீடியோவில் இடம் பெறும் அளவிற்கு கூட விஜயகாந்தால் தொடர்ந்து பேச முடியாத நிலை உள்ளது. அதாவது ஒவ்வொரு வார்த்தையாக  விஜயகாந்தை சொல்ல வைத்து ரெக்கார்ட்டு செய்து பின்னர் எடிட் செய்து ஒட்டியுள்ளனர்.

 

   அதாவது 22 நொடிகள் ஓடக் கூடிய வீடியோவை 6 முறை எடிட் செய்துள்ளார்கள். விஜயகாந்தால் தான் சொல்ல வருவதை முழுமையாக கூட சொல்ல முடியவில்லை. இதனால் அவரை ஒவ்வொரு வரியாக சொல்ல வைத்து ரெக்கார்ட்டு செய்துள்ளார்கள். உடல் நிலை பாதிக்கப்பட்டு அமெரிக்காவிற்கு விஜயகாந்த் சிகிச்சைக்கு தான் சென்றுள்ளார்.

  

   அப்படி இருக்கும் போது எதற்காக பிரேமலதா விஜயகாந்தை இப்படி வீடியோ பதிவு செய்து வெளியிட அனுமதித்தார் என்கிற கேள்வி எழுந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் தே.மு.தி.க சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு குழு அமைக்கப்பட்டது. இந்த நிலையில் விஜயகாந்தின் வீடியோ வெளியாகியுள்ளது.

 

   அதாவது விஜயகாந்த் நலமுடன் உள்ளார் என்பதை தெரிவிக்க பிரேமலதா இப்படி ஒரு வீடியோ ஏற்பாட்டை செய்திருக்கலாம் என்கிறார்கள். ஆனால் அந்த வீடியோவை பார்த்தால் விஜயகாந்தின் உண்மையான உடல்நிலை அப்பட்டமாக தெரிந்துவிட்டது. எனவே விஜயகாந்தை வைத்து பிரேமலதா இனியும் அரசியல் செய்ய முடியுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.