அத்திவரதர் கோவில் வளாகத்திலேயே கர்ப்பிணி பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்து சம்பவமானது பக்தர்களை மகிழ வைத்துள்ளது.
அத்திவரதர் சன்ன்தியில் அழகிய ஆண் குழந்தை பெற்றெடுத்த பெண்மணி
அத்திவரதர் கோவிலில் நாளுக்கு நாள் கூட்டம் லட்சக்கணக்கில் அதிகரித்து கொண்டே போகிறது. அத்திவரதர் தரிசனம் முடிவடைவதற்கு இன்னும் 2 நாட்களேயுள்ளது. மக்கள் கூட்டம் ஆரவாரத்துடன் அத்திவரதர் கோவிலுக்கு திரண்டு வருகின்றனர். நேற்று கிட்டத்தட்ட 5 லட்சம் மக்கள் அத்திவரதரை ரசிப்பதற்கு வந்தனர். அவர்களுள் விஜயா இருக்க நிறைமாத கர்ப்பிணியும் வந்திருந்தார். கூட்ட நெரிசலையும் கண்டுகொள்ளாமல் கஷ்டப்பட்டு வந்திருந்தார்.
எண்ணியவாறு அத்திவரதரையும் தரிசித்து முடித்தார். காலை 10 மணியளவில் வெளியே வந்த விஜயாவுக்கு கோவில் வளாகத்தில் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்த பொதுமக்கள் சுதாரித்து கேம்ப் மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த மருத்துவர்கள் ஆம்புலன்ஸை தயார் செய்து கோவில் வளாகத்திற்கு விரைந்து வந்தனர்.
கேம்ப் மருத்துவர்கள் விஜயாவுக்கு பிரசவம் பார்த்தனர். இறுதியில் அழகான ஆண் குழந்தை 3 கிலோ எடையளவில் பிறந்தது.
விஜயாவுக்கு குழந்தை பிறந்தது அங்கிருந்த குடிமக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவமானது அத்தி வரதர் கோவிலில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தினாலும் அனைவரையும் மகிழ செய்தது.