ராஜா ராணி செம்பா - கார்த்தி திடீர் நிச்சயதார்த்தம்! அதிரவைக்கும் காரணம்!

ராஜா ராணி சீரியல் செம்பாவாகவும் கார்த்தியாகவும் நடித்து வரும் அல்யா - சஞ்சீவ் அண்மையில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.


ராஜா ராணி சீரியல் செம்பா என்றால் தெரியாதவர்களே இருக்க முடியாது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் செம்பா கதாபாத்திரம் அனைத்து தரப்பினரையும் கவர்ந்தது. வெகுளியான கேரக்டரில் செம்பாவாக நடித்துள்ள அல்யா பின்னி பெடல் எடுத்து இருப்பார்.

ஆனால் நிஜ வாழ்க்கையில் செம்பா அப்படி இல்லை. ஏனென்றால் ராஜா ராணி சீரியல் மூலம் புகழின் உச்சத்திற்கு வருவதற்கு முன்புவரை மனஸ் என்பவரை செம்பா காதலித்து வந்தார். கலைஞர் டிவியின் மானாட மயிலாட நிகழ்ச்சியின் மூலம் டான்ஸராக அறிமுகமான செம்பா மனஸ் மூலமாகத்தான் அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பெற்று சின்னத்திரையில் முன்னணிக்கு வந்துள்ளார்.

ஆனால் ராஜா ராணி சீரியல் நடித்துக்கொண்டிருக்கும்போது செம்பா மனஸ் உடனான காதலை முறித்துக்கொண்டார். இதற்கு காரணம் சீரியலில் செம்பாவின் கணவராக நடித்து வரும் சஞ்சீவ் கார்த்திக். சீரியலில் கணவன் மனைவியாக நடித்து வந்த இருவரும் நிஜவாழ்க்கையிலும் அப்படியே வாழ ஆரம்பித்தனர்.

இதனால் செம்பா மனஸை கழட்டி விட்டுவிட்டு சஞ்சீவி பிடித்துக்கொண்டார். இந்த நிலையில் திடீரென இருவரும் நிச்சயதார்த்தமும் செய்து கொண்டனர். இதற்கான காரணத்தை விசாரித்த போது தான் திடுக் தகவல் கிடைத்தது.

அதாவது விரைவில் ராஜா ராணி சீரியல் விஜய் டிவியில் முடியப் போகிறது. அதன் பிறகு சம்பா எனும் அல்யாவுடன் சின்னையா வாக நடித்து வரும் சஞ்சீவ் இணைந்து நடிப்பதற்கான வாய்ப்பு குறைவு.

மேலும் செம்பா வேறு சீரியலில் நடிக்கச் சென்று அங்கு வேறு யாருடனும் காதல் வயப்பட்டு விட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தில்தான் சஞ்சீவ் அவசர அவசரமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாகக் கூறுகிறார்கள்.