நம்மை வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் ஒரு பெண்ணின் குழந்தை இது..! யார் தெரியுமா?

நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் அறந்தாங்கி நிஷாவின் அழகிய பெண் குழந்தையின் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.


நகைச்சுவையான பேச்சால் எல்லா தரப்பினரையும் தன்வசம் படுத்தியவர். அறந்தாங்கி நிஷா தற்போது காமெடி நடிகையாக வலம் வருகிறார். பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் இடையே அறிமுகமானவர்.

இந்த நிகழ்ச்சியின் மூலமாக அனைத்து தரப்பு மக்களையும் தன்னுடைய நகைச்சுவையான பேச்சால் கவர்ந்து இழுத்தார் அறந்தாங்கி நிஷா. இவருக்கு ரியாஸ் என்பவருடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது இவர்கள் இருவருக்கும் திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் லிசா சமீபத்தில் இரண்டாவது முறையாக கர்ப்பமானார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக அழகிய பெண் குழந்தை பிறந்தது . நிஷா ஆசைப்பட்டது போலவே அவருக்கு பெண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது. 


நிஷாவிற்கு தன்னுடைய அம்மாவே குழந்தையாக வந்து பிறந்திருக்கிறார் என்ற ஒரு மகிழ்ச்சியும் நிறைந்துள்ளதாக அவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தின் மூலம் ரசிகர்களிடம் கூறியிருக்கிறார். தற்போது நடிகை அறந்தாங்கி நிஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் அதனை பார்த்த அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.